Saturday, July 27, 2024
Home > செய்திகள் > மேட் இன் தமிழ்நாடு முழக்கம்..! தமிழ்நாட்டை விட்டு ஓடும் நிறுவனங்கள்..!

மேட் இன் தமிழ்நாடு முழக்கம்..! தமிழ்நாட்டை விட்டு ஓடும் நிறுவனங்கள்..!

தமிழகத்தில் போடப்பட்ட ஊரடங்கின் காரணமாக பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கலின் எண்ணிக்கையை பாதியாக குறைத்தன. அதன்பின்னர் மெல்ல மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நிறுவனங்கள் இயங்க ஆரம்பித்தன.

ஆனால் தொழிலாளர்கள் பலர் மீண்டும் ஊதிய உயர்வு கேட்டு போராட பல முன்னணி நிறுவனங்கள் செய்வதறியாமல் திகைத்து நிறுவனங்களை மூட ஆரம்பித்துவிட்டன. அதிலும் சென்னை ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீசிட்டி எனும் தொழிற்பேட்டைக்கு தமிழக நிறுவனங்கள் இடம் மாற்றம் செய்து வருகின்றன.

சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த காளிமார்க் நிறுவனம் ஆந்திராவிற்கு இடம் பெயர்ந்தது. அதை தொடர்ந்து பல முன்னணி நிறுவனங்கள் இடம்பெயர்ந்து வருகின்றன. சென்னையில் அம்பத்தூர் திருமுடிவாக்கம் கீழ்கட்டளை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலுள்ள பல நிறுவனங்கள் இடம்பெயர்ந்து வருகின்றன என கூறப்படுகிறது.

`

இதனால் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. மீதி இருக்கும் சில முன்னணி நிறுவனங்களை போராட்டம் எனும் பெயரில் மூடவைத்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. மிகப்பெரிய நிறுவனமான சன்மார் குழுமத்தின் ஸ்ரீபெரும்புதூர் கிளை ஒருமாதகாலத்திற்கும் மேலாக கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் மூடப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

“ஏற்கனவே தொழில் தொடங்க உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் சறுக்கிக்கொண்டே போகிறது. இந்நிலையில் போராட்டம் தொழிற்சாலைகள் வேறு மாநிலத்திற்கு மாற்றம் எனும் நிலைமை தொடர்ந்தால் தமிழகம் பழைய பீஹாராகிவிடும். மேட் இன் தமிழ்நாடு முழக்கம் சரிதான். ஆனால் தயாரிக்க தொழிற்சாலைகள் வேண்டுமே ” என தொழில்முனைவோர் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் கவலை தெரிவித்தார்.

```
```

….உங்கள் பீமா

#madeintamilnadu #mkstalin #dmk