11-3-22/10.44am
பஞ்சாப் : ஐந்துமாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் நான்கு மாநிலங்களில் பிஜேபி ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. தேசிய கட்சியான காங்கிரஸ் மணிப்பூரில் ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை. அதேபோல பிஜேபி பஞ்சாப்பில் ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்முறையாக பஞ்சாபில் போட்டியிட்ட ஆம் ஆத்மீ 92 இடங்களில் வெற்றிபெற்று மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. அங்கு ஆட்சியமைக்க 59 சீட்டுகள் போதுமான நிலையில் தனிப்பெரும்பான்மையாக உருவெடுத்துள்ளது ஆம் ஆத்மீ. இந்நிலையில் நேற்று அம்ரிதசரஸ் எல்லைப்பகுதியில் நுழையமுயன்ற பாகிஸ்தானி ஒருவர் பி.எஸ்.எப் வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இதுகுறித்து பேசிய பி.எஸ்.எப் செய்தித்தொடர்பாளர் ” நடுத்தர வயதுடைய நபர் ஒருவர் இந்திய பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வேலியை கடந்து அமிர்தசரஸ் பகுதிக்குள் நுழையமுயன்றான். வீரர்கள் எச்சரித்தும் அத்துமீறியுள்ளான். வீரர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள அவனை சுட்டுக்கொன்றுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
இதே அமிர்தசரஸ் செக்டரில் நேற்றுமுன்தினம் பாகிஸ்தான் ட்ரோன் ஒன்று ஹவேலின் கிராமப்பகுதியில் மர்மமான முறையில் பறந்துகொண்டிருந்தது. அதை பி.எஸ்.எப்.வீரர்கள் சுட்டுவீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஊடுருவல் செய்தியை வெளியிட்ட ANI ட்விட்டர் பக்கத்தில் ” ஆம் ஆத்மீ வெற்றியை பாகிஸ்தான் கொண்டாடி வருகிறது” என்றும் கெஜ்ரிவாலை பார்க்க வந்த பாகிஸ்தானி என்றும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
….உங்கள் பீமா