22-1-22/10.00am
அரியலூர் : அரியலூர் பகுதியில் விவசாயம் செய்து வருபவர் முருகானந்தம். இவரது மகள் காருண்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது.) இவர் அரியலூர் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்தார். சிறுமியை பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த சிலர் மதம் மாற கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.

மதம் மாற மறுத்த சிறுமியை கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சிறுமி மதம் மாற மறுக்கவே அந்த சிறுமியை மேலும் வற்புறுத்தியதாக சிறுமியின் பெற்றோர்கள் கூறுகின்றனர். இதனிடையே மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்தியா முழுவதும் இந்த செய்தி வைரலானது.

அதையடுத்துன் தஞ்சை எஸ்பி ரவளி ப்ரியா மதமாற்றம் செய்ய கட்டாய படுத்தியதாக எந்த ஒரு தகவலும் இல்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று மாலை ஐந்துமணியளவில் திருவையாறு துணைக்கண்காணிப்பாளர் அவர்கள் காருண்யாவின் பெற்றோரை அழைத்து சுமார் இரண்டரை மணிநேரம் விசாரணை செய்ததாக தெரிகிறது.

விசாரணை முடிந்து வெளியே வந்த பெற்றோரிடம் ஊடகங்கள் ” உங்களை மதம் மாற்ற முயற்சி செய்கிறார்கள் என்றால் இரண்டு வருடமாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்” என அதிபுத்திசாலித்தனமான கேள்வியெழுப்பினர். சிறுமியின் தாயார் ஊடகங்களிடம் சம்பவங்களை விளக்கி கூறினார். இருந்தபோதிலும் சம்பவத்தை திசைதிருப்புவது போலவே ஊடகங்கள் கேள்வியெழுப்பியது அருகிலிருந்தவர்களை முகம்சுளிக்கவைத்தது.
…..உங்கள் பீமா