திமுக அரசுஆட்சிக்கு வரும் முன்னரே இந்து விரோத போக்கை கடைப்பிடித்து வந்தது. இப்போது அது வெட்ட வெளிச்சமாகிவிட்டது என பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர். அதற்கேற்றாற்போல “தூத்துக்குடி மற்றும் சென்னை பகுதிகளில் கிறித்தவ தேவாலயங்களின் கொடியேற்றத்தையும் கிறித்தவ கூட்டத்தையும் தடை செய்யாத அரசு இந்துக்களின் திருவிழாவான விநாயக சதுர்த்தியை தடை செய்கிறது.” என இந்து முன்னணியினர் குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.
தமிழகத்தில் ஆங்காங்கே சிலை உடைப்பு சம்பவங்களும் சிலைகளை காவல்துறை கைப்பற்றிவருவதும் நடைபெற்றுவருகிறது.இந்நிலையில் திமுக அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து பொதுமக்கள் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று சங்கரன்கோவில் பகுதியில் திரண்ட பொதுமக்கள் திமுக அரசை கடுமையாக விமர்சித்தனர். அப்போது அங்கு இருந்த ஒரு பெண் ” நாங்க வெட்டுனமா குத்துனமா, எங்க சாமிய நாங்க கும்பிட ஏன் இந்த பாடு. சங்கரன் கோவில்ல இதுவரை ஏதாவது கலவரம் விநாயகர்சதுர்த்திக்கு நடந்திருந்தா ரெக்கார்ட காட்டுங்க. நீங்க சாமி கும்பிடலேன்னா நாங்க கும்புடறத தடுக்க நீங்க யாரு.” என கேட்டு திமுகவை கடுமையாக விமர்சித்தார். அதனால் அந்த இடத்தில் சற்றுநேரம் பரபரப்பு நிலவியது.
….உங்கள் பீமா