கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டீஸ்கர் முதல்வரின் தந்தை நந்தகுமார் பாகெல் உத்திரபிரதேசத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பிராமண மக்களை தரக்குறைவாக பேசினார். அதையடுத்து பிராமண சங்கம் சார்பில் ராய்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைமையிலான சட்டீஸ்கர் மாநில முதல்வர் தனது தந்தையின் தரக்குறைவான பேச்சுக்களை பற்றி குறிப்பிடும்போது ” சட்டம் தன கடமையை செய்யும். சட்டத்தின் முன் யாவரும் சமம். கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.” என கூறினார்.
அதையடுத்து முதல்வர் பூபேஷ் பாகெலின் தந்தை மீது வழக்கு பதியப்பட்டது.இன்று அவர் மாலையில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் பிராமண சங்கத்தை சேர்ந்தவர்கள் நீதி கிடைத்துவிட்டது என சந்தோசப்படும் வேளையில், வெளிவந்த புகைப்படம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
முதல்வரின் தந்தை ஏதோ விருந்துக்கு வந்தவர் போல சகல சௌகரியங்களுடன் காவல்நிலைய அறையில் VIP போல ஒரு நாற்காலியில் அமர்ந்து உணவருந்துகிறார். அவருக்கு பாதுகாப்பு கொடுக்க பூனைப்படை அதிகாரிகள் கைகட்டி நிற்கின்றனர்.
இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி, காங்கிரசின் முகத்திரையை கிழித்தெறிகின்றனர் நெட்டிசன்கள்.
…உங்கள் பீமா