Tuesday, June 17, 2025
Home > பொழுதுபோக்கு > பிவிஆர் தியேட்டரில் பரபரப்பு..!? ப்ளூசட்டை மாறனை தாக்கினார்களா ரசிகர்கள்..?

பிவிஆர் தியேட்டரில் பரபரப்பு..!? ப்ளூசட்டை மாறனை தாக்கினார்களா ரசிகர்கள்..?

18-3-22/12.01pm

சென்னை : பிவிஆர் தியேட்டரில் படம்பார்க்க வந்த ப்ளூசட்டை மாறனை ரசிகர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக அஜித் மற்றும் சூர்யா ரசிகர்களை தொடர்ந்து வம்பிழுத்துவருகிறார் மாறன். அதன் எதிரொலியாக தாக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை திரைக்கூத்தாடி சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படங்களை மிக மோசமாக விமர்சித்திருந்தார் ஆன்டி இந்தியன் என்ற திரைப்படத்தை எடுத்து அகில உலக ஹிட் கொடுத்த ப்ளூசட்டை மாறன். அதிலும் அஜித் நடனத்தை பரோட்டாவுக்கு மாவு பிசைந்தது போல இருக்கிறது என்று விமர்சனம் செய்ததோடு மட்டுமல்லாமல் பார்க்க பஜன்லால் சேட் போன்று தோற்றமளிக்கிறார் என கிண்டலடித்திருந்தார்.

இதனால் கொந்தளித்த அஜித் ரசிகர்கள் உன்னை வெளியில் கண்டால் துவைத்துவிடுவோம் என மிரட்டியிருந்தனர். இதைத்தொடர்ந்து பிவிஆர் தியேட்டரில் சில அஜித் ரசிகர்கள் மாறனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அதன்பின்னர் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

`

ஆனால் மாறன் இதை மறுத்துள்ளார். மேலும் திரைபிரபலங்களான ஆர்யன் ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோர் மாறனை கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

```
```

இதுகுறித்து ப்ளூசட்டை தனது ட்விட்டரில் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை எனவும் தன்னை பிரபலப்படுத்துவதற்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

…..உங்கள் பீமா