தேசத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் சமூக விரோத கருத்துக்களை வெளியிடுவதில் NDTVக்கு நிகர் யாருமில்லை என மஹாராஷ்டிரா பிஜேபியினர் கூறிவருகின்றனர். ஆப்கானை தீவிரவாதிகள் கைப்பற்றியதிலிருந்து இந்தியாவில் லிபெரல்சுகள் இந்து அமைப்புகளை குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்ஸயும் தாலிபான்களுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.
பாலிவுட்டை சேர்ந்த பாடலாசிரியர் ஒருவர் நேதாஜி மற்றும் பகத் சிங் ஆகியோரும் தீவிரவாதிகள் என கூறி சர்ச்சையை தொடங்கிவைத்தார். அடித்து மூனாவர் என்ற பாடலாசிரியர் அதே கருத்தை கூறி காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் உன்அகாடெமியை சேர்ந்த டீச்சர் ஒருவர் பகத்சிங்கும் தீவிரவாதிகளும் ஒன்று என பேட்டியளித்தார். மேலும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாக பாலிவுட்டை சேர்ந்த ஜாவேத் அக்தர் எனும் பாடலாசிரியர் “ஆர்.எஸ்.எஸ்அமைப்பும் தாலிபான்களும் ஒன்றுதான். தாலிபான்கள் எவ்வளவு பயங்கரமானவர்களோ அதே அளவுக்கு ஆர்.எஸ்.எஸ்அமைப்பு பயங்கரமானது.” என NDTV க்கு பேட்டியளித்துள்ளார்.
இது இந்தியாவில் பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிஜேபி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மஹாராஷ்டிரா பிஜேபி சேத்தி தொடர்பாளர் மற்றும் எம் எல் ஏ ராம்கடம் ” கைகளை கட்டிக்கொண்டு ஜாவேத் அக்தர் மன்னிப்பு கோரவில்லையெனில் அவர் சம்மந்தபட்டிருக்கும் எந்த திரைப்படமும் இந்தியாவில் எங்கும் வெளிவர முடியாது.” என தெரிவித்தார்.
மேலும் மஹாராஷ்டிரா பிஜேபி அலுவலகத்தில் கூடிய தொண்டர்கள் ஜாவேத் அக்தரின் உருவபொம்மையை எரித்து தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். ட்விட்டரில் boycottjavedakthar என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
…உங்கள் பீமா