Saturday, July 27, 2024
Home > செய்திகள் > பாவம்..! காஷ்மீரை காப்பற்ற கிளம்பியவரை கம்பி எண்ண வைத்த ஆஸ்திரேலிய உளவுத்துறை…!

பாவம்..! காஷ்மீரை காப்பற்ற கிளம்பியவரை கம்பி எண்ண வைத்த ஆஸ்திரேலிய உளவுத்துறை…!

ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் பிரபலமான பழையகார் விற்பனை நிலையம் ஒன்று உள்ளது. அதில் வேலை பார்த்து வருபவர் காலித் டெமிஸ்ஸா. இவர் ஆஸ்திரேலியாவின் மெசேஜ் பிளாட்பாரமான விக்கரில் 2019ல் முகம் தெரியாத நபருடன் பழகியுள்ளார்.

அப்போது தான் காஷ்மீர் மக்களை காப்பாற்ற விரும்புவதாகவும் அல்லாஹ்வின் திருப்பெயரால் காஷ்மீருக்காக போராட தயாராக இருப்பதாகவும் பேசியிருக்கிறார். பாவம் காலித்துக்கு தெரியாது தான் பேசிக்கொண்டிருப்பது ஆஸ்திரேலிய அண்டர் கவர் ஏஜென்ட் என்று. பேசியவரை இஸ்லாமிய அடிப்படைவாதி என நம்பியிருக்கிறார். இரண்டு வருடங்களாக பேசிய காலித் கடந்த மாதம்,

“நான் உடனடியாக காஷ்மீர் கிளம்புகிறேன் எனக்கு துப்பாக்கி வேண்டும்”என உளவுத்துறை ஏஜென்டிடமே கேட்டிருக்கிறார். பதிலுக்கு அவர் ஒரு சர்வீஸ் ஸ்டேஷன் பெயரை சொல்லி அங்கு போய் ஒருவரை சந்திக்க சொல்லியிருக்கிறார்.

`

வடிவேலு பாணியில் காஷ்மீரை காப்பாற்றிவிடலாம் என நம்பி அந்த அப்பாவி சென்றிருக்கிறார். அங்கு இருந்ததோ இன்னொரு அண்டர் கவர் ஏஜென்ட். அந்த ஏஜெண்டிடம் காலித் 880 டாலரை கொடுத்து AK 47 ரக துப்பாக்கியை கேட்டிருக்கிறார். அப்போது காவல்துறை அலேக்காக காலித்தை அமுக்கியது. காலித்தை காஷ்மீரை காப்பாற்ற விடாமல் கைதுசெய்தது.

```
```

அந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வலக்கை விசாரித்த நீதிபதி,” குடும்பத்தை பிரிந்து போராட தயாராக இறுக்கிற நீங்கள் தாராளமாக நான்கு வருடம் ஒன்பது மாதம் சிறையில் இருக்கலாம். உங்களுக்கு குடும்ப நலனை விட உங்கள் கொள்கை முக்கியமானதால் நீங்கள் 19 மாதங்கள் எந்த வித ஜாமீனும் பெறமுடியாது.” என தீர்ப்பளித்தார்.

…உங்கள் பீமா