12-2-22/12.30pm
கேரளா : கர்நாடகாவில் சில அடிப்படைவாதிகளின் தூண்டுதலால் ஏற்படுத்தப்பட்ட ஹிஜாப் பிரச்சினை மத்தியபிரதேசம் ராஜஸ்தான் டெல்லி என அனைத்துமாநிலங்களிலும் தொடர ஆரம்பித்திருக்கிறது. மேலும் இது உலக அளவில் சில அடிப்படைவாதசக்திகளின் தூண்டுதலால் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இந்த வேலையை தனது சிரமேற்கொண்டு செய்தி நிறுவனங்கள் முழுவீச்சில் செய்திருக்கின்றன.
இதனிடையே அமெரிக்க அரசின் சிறுபான்மையின உரிமை பாதுகாப்பு குழு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று இந்தியாவை கொந்தளிக்க செய்துள்ளது. “ஹிஜாப் அணிய தடைவிதித்திருப்பது பெண்கள் மற்றும் மாணவிகளின் மத உரிமையை பறிக்கிறது” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதற்க்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்க்ஷி,
” கர்நாடகாவில் சீருடை அணியும் விவகாரம் குறித்து மாண்புமிகு நீதித்துறை விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறது. நாங்கள் ஜனநாயகத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் அபரிமிதமான நம்பிக்கை கொண்டுள்ளோம். உங்களின் உள்நோக்கத்தோடு கூடிய கருத்துக்களை நாங்கள் எப்போதும் ஏற்பதில்லை. இது எங்கள் உள்நாட்டு விவகாரம்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான் தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ” சிலரின் விருப்பங்களுக்கு இஸ்லாமிய மாணவிகளை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.போராட தூண்டி மாணவிகளை மீண்டும் இருண்டகாலத்திற்குள் தள்ள முனைகிறார்கள். சீக்கியர்கள் டர்பன் அணியும்போது நாங்கள் ஹிஜாப் அணிய கூடாதா என அபத்தமாக கேள்வியெழுப்புகிறார்கள்.
அது மதம் சார்ந்தது மட்டுமல்லாமல் அது முக்கியத்துவமானது. ஆனால் ஹிஜாப் அணிய சொல்லி எந்த குரானும் சொல்லவில்லை. இஸ்லாத்தில் ஹிஜாப் அணியும் நடைமுறை பற்றி குர்ஆனில் எந்த ஒரு குறிப்பும் இல்லை” என கூறியுள்ளார்.
…..உங்கள் பீமா