Saturday, July 27, 2024
Home > அரசியல் > முதல்வரின் வேளாண் உருட்டு..! துருப்பிடித்த கம்பிகளின் கதை..!

முதல்வரின் வேளாண் உருட்டு..! துருப்பிடித்த கம்பிகளின் கதை..!

“திமுக தேர்தலுக்கு முன் 500 வாக்குறுதிகள் கொடுத்து அதில் 200 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக சமீபத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆனால் அதில் பாதி மத்திய பிஜேபி அரசின் மக்கள் னால திட்டங்கள். மீதி பாதி அதிமுக ஏற்கனவே கொண்டுவந்த திட்டங்களுக்கு மறுமுலாம் பூசியிருக்கிறது திமுக அரசு” என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன.

இந்நிலையில் திமுக தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் ” இந்தியாவிலேயே வேளாண்மைக்காக முதன்முறையாக நிதிஅறிக்கை சமர்ப்பித்தது திமுக அரசுதான். இது மக்களுக்கான அரசு என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம்.

வேளாண் அதிகாரிகள் விவசாயிகள் மற்றும் வேளாண் நிறுவனங்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை பரிசீலித்த பிறகே வேளாண்மைக்கென தனியாக நிதிநிலையறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.” என்று அதில் தெரிவித்துள்ளார்.

`

ஆனால் பாவம் முதல்வருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. இந்தியாவிலேயே முதல்முறையாக 2011-2012 களிலேயே கர்நாடகாவில் வேளாண் மேம்பாட்டுக்கென தனியாக நிதிநிலையறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அதை தொடர்ந்து 2013-14 ல் ஆந்திராவில் வேளாண் நிதிநிலையறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

தமிழகத்தில் மூன்றாவதாக வேளாண் மேம்பாட்டுக்கென நிதியறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். இதுகுறித்து பிஜேபியினர் “ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதில் திமுகவை மிஞ்ச இந்தியாவிலேயே கட்சிகள் கிடையாது” என விமர்சிக்கின்றனர்.

```
```

…..உங்கள் பீமா

#agribudget #mkstalin #dmk