Sunday, January 26, 2025
Home > செய்திகள் > FACT-CHECK உயிருடன் இருப்பவருக்கு அஞ்சலி செலுத்திய ஊடகங்கள்..!

FACT-CHECK உயிருடன் இருப்பவருக்கு அஞ்சலி செலுத்திய ஊடகங்கள்..!

16-12-21/11.23am

குன்னூர் : கடந்த சில நாட்களுக்கெ முன்னர் நிகழ்ந்த கோரவிபத்தில் முப்படை தளபதி உட்பட 13 பேர் கோர மரணமடைந்தனர்.

அந்த விபத்தில் குரூப் கேப்டன் வருண்சிங் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார். தீக்காயங்கள் 80% சதவிகித அளவில் இருந்ததால் அவரை காப்பாற்றுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டதாக மருத்துமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பெங்களூர் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைக்கு பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்துவிட்டதாக இந்திய விமானப்படை அதிகார பூர்வமாக அறிவித்தது.

இந்த கோர மரணங்களால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் கண்ணீர்விட்டு கதறிக் கொண்டிருக்கையில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் உள்ள பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டிருந்தது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. இவர்கள் இப்படி எனில் ஊடகங்கள் இதை விட கீழாக நடந்து கொள்கின்றன என நடுநிலையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

`

நேற்று மரணமடைந்த குரூப் கேப்டன் வருண் அவர்களின் புகைப்படத்திற்க்கு பதிலாக உயிருடன் இருக்கும் இந்திய கப்பற்படை கமாண்டர் சவ்ரியா சக்ரா வருண் சிங் அவர்களின் புகைப்படங்களை பகிர்ந்திருக்கின்றனர். அதுவும் தமிழ் ஊடகங்கள் என்பது மேலும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது.

```
```

றஏற்கெனவே தமிழகம் காஷ்மீராக மாறிவருகிறது என்ற கருத்துக்கள் மேலோங்கி வரும். வேளையில் இந்த செயல் மேலும் பல சந்தேகங்களை கிளப்புகிறது.

…….உங்கள் பீமா