Friday, April 18, 2025
Home > அரசியல் > இமாலய வெற்றி..! காங்கிரஸ் சிவசேனா கூட்டணியை குழியில் தள்ளிய பாஜக..!

இமாலய வெற்றி..! காங்கிரஸ் சிவசேனா கூட்டணியை குழியில் தள்ளிய பாஜக..!

16-12-21/9.50am

மஹாராஷ்டிரா : காங்கிரஸ் சிவசேனா கூட்டணியாக மஹா விகாஸ் அஹாதியை பிஜேபி வீழ்த்தி இமாலய சாதனை படைத்துள்ளது. இது காங்கிரஸ் கூட்டணியை மேலும் அதலபாதாளத்திற்கு தள்ளியுள்ளது.

காங்கிரஸ் சமீபகாலமாக தேசிய அரசியலில் இறங்குமுகமாகவே உள்ளது. சமீபத்தில் சந்தித்த தேர்தலில் அதன் வெற்றிகள் மூன்று சதவிகிதம் அளவிற்கு குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. போட்டியிட்ட நூறு இடங்களில் வெறும் மூன்று சீட்டுகள் மட்டுமே பெற்று தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் சில மாநிலங்களில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் அகோலா வாஷிம் மற்றும் புல்தானா ஆகிய இடங்களில் உள்ளாட்சிக்கான தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள ஆறு சீட்டுகளில் சிவசேனா மற்றும் காங்கிரஸ் கூட்டணி பாஜக போட்டியிட்டன. இதில் நான்கு சீட்டுக்களை வென்று காங்கிரஸ் கூட்டணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது பிஜேபி. இந்த நான்கு இடங்களில் தேர்தலுக்கு முன்னர் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பிஜேபி வெற்றி வாய்ப்பு உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

`

இதில் சிவசேனாவை சேர்ந்த எம்.எல்.சியான கோபிகிஷான் பஜோரியா கடந்த மூன்றுமுறையும் வென்றவர் என்பது குறிப்பித்தக்கது. இவரை எதிர்த்து பிஜேபி சார்பில் போட்டியிட்ட வசந்த் கண்டேல்வால் மொத்தமுள்ள 808 ஓட்டுக்களில் 443 ஓட்டுக்களை பெற்று சிவசேனா கூட்டணியை ஓடவிட்டுள்ளார்.இதுகுறித்து மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் கூறுகையில்,

```
```

“காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கூட்டணியான மஹா விகாஸ் அஹாதிக்கு மக்கள் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்கள். இந்த கூட்டணியின் தோல்வி இனி வருங்காலங்களிலும் தொடரும்” என குறிப்பிட்டார். பிஜேபியின் அடுத்தடுத்த வெற்றிகள் மக்களின் என்ன ஓட்டத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. மேலும் எத்தனை ஊடகங்கள் எத்தனை எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்பினாலும் பிஜேபியின் மதிப்பு மக்களிடையே பெருகிவருவதை இந்த வெற்றிகளில் உணரமுடிகிறது என பிஜேபியினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

……உங்கள் பீமா