Friday, March 29, 2024
Home > செய்திகள் > அமர்ஜவான் ஜோதி : அணைக்கப்படுகிறதா விளக்கு..? கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்..!

அமர்ஜவான் ஜோதி : அணைக்கப்படுகிறதா விளக்கு..? கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்..!

21-1-22/10.45am

டெல்லி : முதலாம் உலகப்போரில் உயிர்நீத்த 84000 வீரர்களின் நினைவாக பிரிட்டிஷ் அரசால் டெல்லி கேட் எழுப்பப்பட்டது. இந்த டெல்லி கேட்டில் 1971ல் நடந்த பாகிஸ்தானுடனான போரில் உயிர்நீத்த 3843 இந்திய வீரர்களின் நினைவாக இந்திரா காந்தியால் அமர் ஜவான் ஜோதி நிர்மாணிக்கப்பட்டது.

அந்த அமர்ஜவான் ஜோதி வருடம் முழுவதும் எரிந்து கொண்டே இருக்கும். இங்கு தான் முன்னர் இஸ்லாமிய அகதிகளால் கலவரம் ஏற்படுத்தப்பட்டு அமர் ஜவான் சேதப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே டெல்லி கேட் பகுதியில் 400 மீட்டர் தொலைவில் இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் தேசத்திற்காக உயிர்நீத்த 25942 வீரர்களுக்காக மத்திய மோடி அரசு நேஷனல் வார் மெமோரியம் ஒன்றை எழுப்பியது.

2019ல் எழுப்பப்பட்ட இந்த மெமோரியல் ஹோமில் அமர் சக்ரா வீரட் சக்ரா மற்றும் தியாக் சக்ரா ரக்ஷக் சக்ரா என நான்கு சரக்கிள்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கிரானைட் கார்களில் தங்கத்தால் ஆன எழுத்துக்களில் வீரர்கள் பெயர் பொருத்தப்பட்டிருக்கிறது. 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த நேஷனல் மெமோரியல் ஹாம் 176 கோடியில் கட்டப்பட்டிருப்பது கூடுதல் தகவல்.

`

கடந்த ஐம்பது வருடங்களாக அமர் ஜோதி ஜவானில் மட்டுமே எரிந்து கொண்டிருந்த விளக்கு இன்று மாலை 3.30 மணியிலிருந்து நேஷனல் வார் மெமோரியலில் எரிய துவங்கும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தேசத்திற்கு எதிரான செயல் என ராகுல் காந்தி மற்றும் மமதா போன்றோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

```
```

இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் தேசத்திற்காக உயிர்நீத்த ஜவான்களின் நினைவாக எழுப்பப்பட்டதே இந்த நினைவகம். இந்த நினைவகத்தில் விளக்கு ஏற்றப்படுவதே இந்திய வீரர்களுக்கு செய்யப்படும் மரியாதை என இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேஷனல் வார் மெமோரியலில் மாலை நடக்க இருக்கும் நிகழ்ச்சிக்கு சீப் ஏர்மார்ஷல் பி.ஆர். கிருஷ்ணா தலைமை தங்குவார் என செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

…..உங்கள் பீமா