17-1-22/16.15pm
ஆந்திரா : கால்நடைதிருவிழாவின் போது ஆடு வெட்ட முயலுகையில் தவறுதலாக ஆளை வெட்டிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி அருகிலுள்ள வலசப்பள்ளி எனும் கிராமத்தில் சங்கராந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக கால்நடைதிருவிழா நேற்று இரவு நடைபெற்றது.
கிராம மக்கள் அனைவரும் அருகிலுள்ள எல்லம்மாள் கோவிலில் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த சலபதி என்பவர் யாகத்தின் ஒரு பகுதியாக ஆட்டின் தலையை வெட்ட முன்வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ஆட்டை பிடிக்க முன்வந்தார், இதனிடையே சலபதி வெட்டியதில் தவறுதலாக தலை துண்டிக்கப்பட்டு சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விவரங்களை சேகரித்தனர்.
பின்னர் கொலை வழக்காக பதிவு செய்தனர். சுரேஷுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் தவறுதலாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
……உங்கள் பீமா