Friday, March 29, 2024
Home > அரசியல் > வலியுறுத்திய பிஜேபி..! வழிக்கு வந்த திமுக..!

வலியுறுத்திய பிஜேபி..! வழிக்கு வந்த திமுக..!

19-1-22/10.35am

கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலைகளில் வாகன நிறுத்தக்கட்டணம் வசூலிக்க மாநகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டது. பிஜேபி தலைவர்களின் தொடர் அழுத்தத்தால் டெண்டர் விலக்கி கொள்ளப்படுவதாக கோயம்பத்தூர் மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாநகராட்சி வருவாய்ப்பிரிவு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் கோயம்புத்தூர் பிரதான சாலைகளில் வாகன கட்டணம் வசூலிக்க ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது. மிக முக்கிய சாலைகளான ஒப்பனக்கார வீதி மேட்டுப்பாளையம் சாலை பெரியகடைவீதி சத்தி ரோடு மற்றும் அஞ்சப்பா சாலை போன்ற இடங்களில் நான்கு சக்கரவாகன நிறுத்தக்கட்டணம் 40 ரூபாய் என்றும் இருசக்கரவாகனங்களுக்கு 10 ரூபாய் என்றும் விலை நிர்ணயித்திருந்தது.

மேலும் இதர இடங்களில் நான்கு சக்கர வாகனத்திற்கு 30 ரூபாய் எனவும் இருசக்கர வாகனத்திற்கு 10 ரூபாய் எனவும் கட்டணம் நியமித்தது. இதையடுத்து பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது கண்டனங்களை தெரிவித்திருந்தார். மேலும் இந்த திட்டத்தை கைவிடவேண்டும் எனவும் வலியுறுத்தினார். தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலையும் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் இதை வலியுறுத்தியிருந்தார்.

`

“அறிவாலய ஆட்களுக்கு 40 ரூபாய் சாதாரணம். ஆனால் நடுத்தரமக்களுக்கு இது இயலாத காரியம். இது மக்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்குகிறது. இந்த திட்டத்தை அறிவாலய அரசு உடனடியாக கைவிடவேண்டும்” என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே நேற்று முன்தினம் கோயம்புத்தூர் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் “தகுதி வாய்ந்த ஒப்பந்த நிறுவனங்களிடமிருந்து விருப்பக்கேட்பு அறிக்கை பெறப்படவில்லை. எனவே மாநகராட்சி பகுதிகளில் வாகனக்கட்டணம் ஒப்பந்தக்காரர் மூலம் வசூல் செய்யும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது” என அறிவித்துள்ளது.

```
```

வானதி சீனிவாசன் தனது ட்விட்டரில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பிஜேபியினர் கூறுகையில் தலைவர் அண்ணாமலை சொல்வதை திமுக ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. இது பிஜேபிக்கு கிடைத்த வெற்றியல்ல. கோயம்புத்தூர் மக்களுக்கு கிடைத்த வெற்றி என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

……உங்கள் பீமா