1-11-21 / 6.35am
கடந்த சில வருடங்களாக பிஜேபி தொண்டர்கள் மற்றும் இந்து அமைப்பினர் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று பிஜேபி பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் திரிசூர் மாவாட்டம் சவாகாட் பகுதியை சேர்ந்தவர் பைஜூ வயது 35. இவர் பிஜேபி முழுநேர பணியாளராக இருந்தார். அந்த பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து அதை பூர்த்தி செய்து வந்து மக்களிடையே நன்மதிப்பை பெற்றிருந்தார்.
இவர் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் தான் வெளிநாட்டிலிருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மணத்தல நாகயாட்சி திருக்கோவில் அருகே புறாக்களை விற்று வந்தார். அவருடன் சிபிஐ எம் ஐ சேர்ந்த ஒருவர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு பைஜூ மர்ம நபர்களால் குத்திக்கொல்லப்பட்டார். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை சடலத்தை கைப்பற்றியுள்ளது. மேலும் அங்கிருந்த சிசிடிவி வீடியோ ஆதாரங்களை கைப்பற்றியுள்ளது. மேலிட அழுத்தத்தால் வழக்கை இருதரப்பு பகை என முடிக்கப்பார்க்கிறது என பிஜேபியினர் குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.
மேலும் இன்று கடப்புரம் மற்றும் சவகாட் நகராட்சி பகுதிகளில் பிஜேபி சார்பில் கடையடைப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேரள மாநில பிஜேபி தலைவர் சுரேந்தர் கூறுகையில் ” SDPI கும்பலால் குத்திக் கொல்லப்பட்ட பைஜூவுக்கு நீதி கிடைக்கவேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” என தெரிவித்தார்.
…..உங்கள் பீமா
#bjpworker #murdered #kerala #chavakad #tirissur #sdpi #பைஜூ #பிஜேபி