Monday, February 10, 2025
Home > செய்திகள் > இந்தியர்கள் அதிகம் சாப்பிடுவதாலேயே உணவுப்பற்றாக்குறை ஏற்படுகிறது..! முன்னாள் பிரதமர்..!

இந்தியர்கள் அதிகம் சாப்பிடுவதாலேயே உணவுப்பற்றாக்குறை ஏற்படுகிறது..! முன்னாள் பிரதமர்..!

14-11-21/ 17.37pm

இந்தியா : இந்தியர்கள் அதிகம் சாப்பிடுவதாலேயே நாட்டில் உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என முன்னாள் பிரதமர் பேட்டியளித்திருந்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜவஹர்லால் நேரு பிறந்ததினமான இன்று குழந்தைகள் தினமாக தேசமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இணையத்தில் நேரு செய்த சாதனைகள் என்கிற பெயரில் காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவு மனப்பான்மை கொண்டவர்கள் முன்னாள் பிரதமர் நேருவை புகழ்ந்தாலும் அவரால் ஏற்பட்ட வீழ்ச்சிகளை இணையவாசிகள் பட்டியலிடுகின்றனர்.

“1962 ல் அக்சய் சின்னை சீனாவிடம் பறிகொடுத்தார். கரகோணம் பாஸ் ஐ சீனாவிடம் கொடுத்தது. 1964ல் ஷேக் அப்துல்லாவை விடுவித்தது. சீனாவுடனான நதிநீர் பங்கீட்டை சமமான முறையில் பிரிக்காதது. பாரத ரத்னம் விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டது நேருவின் ஞாபகங்கள்” என பதிவிட்டிருக்கிறார் ஒரு இணையவாசி.

`

மேலும் முன்னாள் பிரதமர் நேரு தனியார் தொலைக்காட்சி நிருபர் இந்தியாவில் உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறதே என கேள்வியெழுப்பியதற்கு ” பொதுவாக இந்தியர்கள் எல்லாம் மிக அதிகமாக சாப்பிட கூடியவர்கள் அதனாலேயே உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது” என கூறியிருக்கிறார் காங்கிரசை சேர்ந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு.

மேலும் சீனாவுடனான போரில் இந்தியா தோற்றபிறகு நடந்த பொதுக்கூட்டத்தில் “இந்தியா சீனாவிடம் தோற்றது நல்லது தான். ஒளிமயமான மறுபக்கத்தை இந்த தோல்வி கொடுத்திருக்கிறது” என கூறியிருக்கிறார். 1959 ல் சுதந்திரத்தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் பேசிய அவர் “இந்தியர்கள் முழு சோம்பேறிகள்” என வர்ணித்திருக்கிறார்.

```
```

இந்தியர்கள் சோம்பேறிகள்

https://twitter.com/MrSinha_/status/1459752459446808576?s=20

இப்படி கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும் முன்னாள் பிரதமரின் நல்ல செயல்களை பாராட்டியே தீரவேண்டும் என்கிறது மற்றொரு இணையவாசிகள் குழு. இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா தனது அஞ்சலியை செலுத்த நேருவின் நினைவிடம் சென்றது குறிப்பிடத்தக்கது.

…….உங்கள் பீமா