Friday, March 29, 2024
Home > அரசியல் > தனிக்கட்சி ஆரம்பிக்கிறாரா தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை..! ஊடகங்களின் புது உருட்டு..!

தனிக்கட்சி ஆரம்பிக்கிறாரா தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை..! ஊடகங்களின் புது உருட்டு..!

14-11-21/ 15.45pm

சென்னை : தமிழக அரசியல் அண்ணாமலை அவர்கள் பாஜக தமிழக தலைவராக பொறுப்பேற்றபின் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் பிஜேபி தலைவர்களை சீண்டி கூட பார்க்காத ஊடகங்கள் அண்ணாமலை வருகைக்குப்பின் கமலாலயம் முன்பே தவம் கிடக்கின்றன.

ஊடக வெளிச்சம் பிஜேபிக்கு புதிதல்ல என கூறினாலும் தமிழக ஊடகங்கள் அண்ணாமலையை சுற்றி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகைகள் ஊடகங்கள் திமுகவுக்கு எதிரான வலிமையான தலைமையாக அண்ணாமலையை கட்டமைக்க தொடங்கிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

எந்த ஒரு கேள்விக்கும் அசட்டையாக பதிலளிக்காமல் ஆணித்தரமாக ஆதாரத்துடன் பேசும் ஒரு தலைமையை ஊடகங்கள் புதிதாக பார்ப்பதாக மேலும் தெரிவிக்கின்றனர். தமிழக பிஜேபி தலைவரின் களப்பணி சற்றே வேறுபட்டு நிற்கிறது. அடிமட்ட தொண்டனையும் அரவணைத்து செல்வதாக பிஜேபி தொண்டர்கள் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர்.

`

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களுடன் நடந்த ஒரு சந்திப்பில் நிருபர் ஒருவர் குதர்க்கமாக கேள்வியெழுப்பினார். நீங்கள் தனிக்கட்சி ஆரம்பிக்கப்பபோகிறீர்களாமே. கட்சிக்குள்ளேயே உங்களுக்கு எதிர்ப்பு அணி உருவாகியிருக்கிறதாமே என கேள்வி எழுப்பினார். மேலும் கொங்கு பாஜக என்று பெயரையும் குறிப்பிட்டார்.

இதற்க்கு கிண்டலாக பதிலளித்த தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை “ஆமாண்ணா. நான் தனியாக கட்சி ஆரம்பித்து நான் மட்டுமே தான் இருக்கவேண்டும் (சிரிப்பு) . அப்படியெல்லாம் இல்லை. பாஜகவை பொறுத்தவரை தனி மனித சித்தாந்தம் என்பது கிடையாது. பாரதிய ஜனதா கட்சியில் அண்ணாமலை என்பவன் ஒரு சாதாரண மனிதன். ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டதால் ஊடகங்கள் முன் நின்று பேசிக்கொண்டிருக்கிறேன்.

```
```

என்னை பொறுத்தவரை நான் கட்சிக்கு செய்ததைவிட எனக்கு கட்சி அதிகமாக செய்திருக்கிறது. ஊடகங்கள் சும்மா இருப்பதில்லை. நக்கீரன் பிரகாஷ் யூடியூபில் வீடியோ வெளியிட்டிருக்கிறார். தொடர்ச்சியாக ஏதோ ஒரு விஷயத்தை எடுத்து போட்டுக்கொண்டிருக்கிறார். யார் என்ன போட்டாலும் சிரித்து கடந்து போய்க்கொண்டிருக்கிறோம்.

நான் ஏற்கனவே சொன்னது போல எந்த ஒரு பத்திரிக்கையின் மீதோ ஊடகங்களின் மீதோ தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கிடையாது. பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு பல்வேறு விதமான கருத்துக்கள் வெளிவந்துகொண்டே இருக்கும். அதில் உண்மையானகருத்து எது பொய்யான கருத்து எது என மக்கள் நடவடிக்கைகளை வைத்து புரிந்துகொள்வார்கள்” என கூறினார்.

…..உங்கள் பீமா