Friday, March 29, 2024
Home > செய்திகள் > அவர்களை அமைதியான இடத்திற்கு அனுப்பிவிட்டார் யோகி- பிரதமர் மோடி..! கதறும் மனித உரிமை ஆர்வலர்கள்..!

அவர்களை அமைதியான இடத்திற்கு அனுப்பிவிட்டார் யோகி- பிரதமர் மோடி..! கதறும் மனித உரிமை ஆர்வலர்கள்..!

22-12-21/10.36AM

உத்திரபிரதேசம் : நேற்று பிரயாக்ராஜுக்குப் பயணம் செய்த பிரதமர் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். சுமார் 16 லட்சம் பெண் உறுப்பினர்கள் பயனடையும் வகையில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.1000 கோடியைப் பிரதமர் பரிவர்த்தனை செய்தார்.

தோழிகள் எனப்படும் வணிகத் தொடர்பாளர்களுக்கான முதல் மாத உதவித் தொகையைப் பரிவர்த்தனை செய்த பிரதமர், 1 லட்சத்திற்கும் அதிகமான முதலமைச்சரின் இளம்பெண்கள் நல்வாழ்வுத் திட்டப் பயனாளிகளுக்குப் பணப்பரிவர்த்தனைகளையும் செய்தார். 200-க்கும் அதிகமான ஊட்டச்சத்து தயாரிக்கும் துணை அமைப்புகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

மேலும் பிரதமர் பேசுகையில் “முதலமைச்சரின் இளம்பெண்கள் நல்வாழ்வுத் திட்டம் போன்ற திட்டங்கள் ஊரக ஏழைகளுக்கும், இளம்பெண்களுக்கும் மிகவும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கும். உத்தரப்பிரதேசத்தில் இரட்டை என்ஜின் அரசால் பெண்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு, கௌரவம், மதிப்பு ஆகியவை முன்னெப்போதும் காணப்படாதவை. முந்தைய சூழ்நிலைகள் திரும்புவதை அனுமதிப்பதில்லையென்று உத்தரப்பிரதேசப் பெண்கள் முடிவு செய்துள்ளனர். தற்சார்பு இந்தியா இயக்கத்தின் சாம்பியன்களாக மகளிர் சுயஉதவிக் குழுக்களின் சகோதரிகளை நான் கருதுகிறேன்” என தெரிவித்தார்.

`

மேலும் பேசிய பிரதமர், இந்தி இலக்கிய கர்த்தா ஆச்சாரிய மகாவீர் பிரசாத் துவிவேதியின் நினைவுத் தினத்தையொட்டி அவருக்கு புகழாரம் சூட்டினார். பிரயாக்ராஜ் என்பது கங்கை-யமுனை-சரஸ்வதி ஆகியவை சங்கமிக்கும் நிலம் என்றும், இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அன்னை சக்தியின் அடையாளம் என்றும் அவர் கூறினார். இந்தப் புனித நகர் என்று பிரம்மாண்டமாக பெண்கள் சக்தியின் சங்கமத்தைக் காண்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் மகளிருக்கு அதிகாரமளிக்கும் பணிகளை ஒட்டுமொத்த தேசமும் பார்த்துக் கொண்டிருக்கிறது . இம்மாநிலத்தின் 1 லட்சத்திற்கும் அதிகமான பயனாளி இளம்பெண்களின் கணக்குகளுக்கு பல கோடி ரூபாயை அவர் பரிமாற்றம் செய்த, முதலமைச்சரின் இளம்பெண்கள் நல்வாழ்வுத் திட்டம் போன்ற திட்டங்கள் ஊரக ஏழைகளுக்கும், இளம்பெண்களுக்கும் மிகவும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன.

சமீப ஆண்டுகளில் இம்மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மேம்பட்டிருக்கிறது. குற்றவாளிகள் ராஜ்ஜியம் மற்றும் சட்டம் செயல்படாத நிலை ஒழிப்பில் மிகப் பெரிய பயனாளிகள் உத்தரப்பிரதேசத்தின் சகோதரிகளும் மகள்களும்தான் என்று அவர் கூறினார். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள முதலமைச்சர் திரு.யோகி ஆதித்யநாத் பாராட்டுக்குரியவர்” என குறிப்பிட்டார்.

```
```

மேலும் “உத்தரப்பிரதேசத்தில் இப்போது பாதுகாப்பும், உரிமைகளும் இருக்கின்றன. உத்தரப்பிரதேசம் இன்று வாய்ப்புகளையும், வணிகத்தையும் கொண்டிருக்கிறது. நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்த்துகள் இருப்பதால் இந்தப் புதிய உத்தரப்பிரதேசத்தை எவராலும் இருட்டுக்குள் தள்ள முடியாது என்பதில் நான் முழு நம்பிக்கை கொண்டிருக்கிறேன்” என குறிப்பிட்ட மோடி,

கடந்த காலங்களில் ரவுடிகள் நகரை கட்டுக்குள் வைத்து அராஜகம் செய்துவந்தனர். ஆனால் தற்போது யோகி அவர்களை அமைதியான இடத்திற்கு அனுப்பிவிட்டார் என உத்திரபிரதேச என்கவுன்டர்களை பற்றி சூசகமாக குறிப்பிட்டார். இதை அறிந்த மனித உரிமை ஆர்வலர்கள் தற்போது பிரதமருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிவருகின்றனர்.

…..உங்கள் பீமா