Friday, September 22, 2023
Home > செய்திகள் > பொது இடங்களில் தொழுகை..! நடிகர் மாதவனின் கிண்டல்..?

பொது இடங்களில் தொழுகை..! நடிகர் மாதவனின் கிண்டல்..?

20-12-21/13.09pm

சென்னை : போக்குவரத்து சாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்கள் என பொதுமக்களுக்கு இடையூறாக இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துகிறார்கள் என பல்வேறு தரப்பினர் குற்றசாட்டை எழுப்பிவருகின்றனர்.

அதை நிரூபிக்கும் விதமாக கடந்த சிலமாதங்களுக்கு முன்பு சென்னை வேளச்சேரியில் போக்குவரத்தை நிறுத்தி இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஓடும் ரயிலில் பயணிகளை எழுப்பிவிட்டு அந்த இருக்கையில் தொழுகை நடத்தியதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல மாநிலங்களில் பொதுப்போக்குவரத்துக்கு இடையூறாக தொழுகை நடத்துவதும் பின்னர் போலீசார் எடுத்து கூறினால் அவர்களை தாக்குவந்தும் என பல இடங்களில் வன்முறை நிகழ்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்நாடக உப்பினன்குடியில் இதே போல நடுரோட்டில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்களுக்கு அறிவுரை கூறிய போலீஸ் அதிகாரிகள் கொடுமையாக தாக்கப்பட்ட அவலமும் நடந்தேறியது.

`

இந்நிலையில் நடிகர் மாதவன் நடித்திருக்கும் ஒரு வெப்சீரிஸில் இதை மையமாக கொண்டு ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் நடிகர் மாதவன் ஒரு அறைக்கு செல்கிறார். அங்கு ஒருவர் தொழுகை நடத்திக் கொண்டிருக்கிறார். இவர் அந்த அறையில் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கிறார். அதை கவனித்த அந்த இஸ்லாமியர் என்ன இது என வினவ,

மாதவன் சார் கல்யாணம் ஆயிடுச்சுல்ல அதான் பேக் பெய்ன். முதுகு வலி அதனால் தான் உடற்பயிற்சி செய்கிறேன் என கூறுகிறார். அந்த அறைக்குள் நுழைந்த சூப்பர்வைசர் ஒருவர் இது பிரேயர் நடக்கும் இடம். அதனால் உடற்பயிற்சி செய்யக்கூடாது என கூற, அதற்க்கு மாதவன் கொடுக்கும் பதில் கரகோஷங்களை வரவழைக்கிறது.

மாதவன் உடனே யோகா நிலையில் நின்று கொண்டு ஓம் நமசிவாய என மந்திரம் சொல்ல ஆரம்பித்ததும் வந்த சூப்பர்வைசர் திரும்ப போய்விடுகிறார். அந்த இஸ்லாமியர் திருதிருவென முழிக்க மாதவன் தனது மந்திரத்தை தொடர்கிறார். இந்த ஒரு நிமிட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது மாதவன் மற்றும் சுர்வீன் சாவ்லா நடிப்பில் நெட்ப்ளிக்சில் வெளிவந்திருக்கும் வெப்சீரீஸ் ஆகும்.

இதன் இயக்குனர் ஹர்டிக் மேத்தா. கதாசிரியர் மனு ஜோசப். நெட்ப்ளிக்சில் வெளியாகி ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது இந்த சீரிஸ்.

……உங்கள் பீமா