Friday, February 7, 2025
Home > செய்திகள் > பெற்றோர்கள் கதறல்…! மூன்று குழந்தைகள் பலி..! ராஜினாமா செய்வாரா முதல்வர்..?

பெற்றோர்கள் கதறல்…! மூன்று குழந்தைகள் பலி..! ராஜினாமா செய்வாரா முதல்வர்..?

20-12-21/12.06pm

டெல்லி : முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலால் நடத்தப்பட்டு வரும் மொஹாலா மருத்துவமனையில் தவறான மருந்தை உட்கொண்டதால் மூன்று குழந்தைகள் உயிரிழந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

நான் முதலமைச்சரானால் இலவச மருத்துவத்திற்கு 500 மருத்துவமனைகள் கட்டித்தருவேன் என அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதியளித்திருந்தார். சொன்னதில் 490 மருத்துவமனைகள் மட்டும் ஏழு வருடங்களாக கட்டித்தரமுடியவில்லை. ஆனால் அனைத்து தேசிய ஊடகங்கள் மற்றும் ரயில்கள் ரயில்நிலையம் மற்றும் பேருந்துகள் என ஒன்று விடாமல் வருடத்திற்கு 400 முதல் 500 கோடிகள் தனது சுயவிளம்பரத்திற்க்காக செலவிடுகிறார் என சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன.

மேலும் அடிப்படை கட்டமைப்பு கூட இல்லாமல் அரசு மருத்துவமனைகள் செயல்படுவதாக டெல்லி மக்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மொஹல்லா மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற சிறு குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு கலாவதி சரண் சிறுவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

`

அங்கு குழந்தைகள் உடம்பில் விஷம் ஏறியிருப்பதாக தெரியவந்தது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 16 குழந்தைகளில் மூன்று குழந்தைகள் மருத்துவமனையிலேயே துடிதுடிக்க இறந்துவிட்டனர். இதனால் அந்த இடமே மயான பூமியானது. இதை தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை ஆணையம் விசாரணையில் இறங்கியது. விசாரணையில் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட இருமல் மருந்து குழந்தைகளுக்கு எமனாகிப்போனது தெரியவந்தது.

அதையடுத்து குறிப்பிட்ட இருமல் மருந்தை தடை செய்ய அனைத்து மொஹில்லா மருத்துவமனைக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு DGHS டெல்லி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அடுத்த மாநிலங்களில் தேர்தல் வரவிருப்பதால் முதல்வர் கெஜ்ரிவால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் உள்ளார். அந்த மாநிலங்களிலும் இலவச மருத்துவமனை மாதந்தோறும் 1000 முதல் 5000 ரூபாய் மற்றும் இலவச மின்சாரம் என தொடர் வாக்குறுதிகளை சளைக்காமல் வழங்கிக்கொண்டிருக்கிறார்.

```
```

முதல்வரின் கவனக்குறைவால் மூன்று பிஞ்சுகளின் உயிர் பிரிந்துவிட்டது. இதற்க்கு தார்மீக பொறுப்பேற்று அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்யவேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

…..உங்கள் பீமா