Friday, February 7, 2025
Home > செய்திகள் > மீண்டும் பரபரப்பு..! முறையிட்ட விவசாயியை தாக்கிய திமுக அமைச்சர்..!

மீண்டும் பரபரப்பு..! முறையிட்ட விவசாயியை தாக்கிய திமுக அமைச்சர்..!

14-11-21/13.15pm

சென்னை; கோரிக்கைளை கேட்டறியவேண்டிய திமுக அமைச்சர்களே பொதுமக்களை தாக்கும் கொடுமை தற்போது தமிழகத்தில் தலைதூக்கியிருக்கிறது. முறையிட்ட விவசாயி ஒருவரை திமுக அமைச்சர் இழுத்து தள்ளிய காட்சி இப்போது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது முதல்வர் மற்றும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் ” ஒட்டு போட்டவர்களுக்கும் ஒட்டு போடாதவர்களுக்கும் நன்றி. மக்கள் மெச்சும் வகையில் ஆட்சி நடத்துவேன். இது மக்களுக்கான ஆட்சி. உங்கள் குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம்.” என கூறினார்.

இதன் பொருளை தவறாக புரிந்து கொண்ட திமுக அமைச்சர்கள் மிரட்டுவதும் தள்ளிவிடுவதும் என செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கோரிக்கை எழுப்ப முயலும் பொதுமக்கள் திமுக தொண்டர்களால் அடித்து விரட்டப்படுகின்றனர். குறையை கேட்டறிய வேண்டிய அமைச்சரோ பிடித்து தள்ளிவிடுகிறார் என பிஜேபியினர் குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.

`

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் பயிர்நிலங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. தமிழக முதல்வர் பயிர்காப்பீடு இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை எழுப்பிவருகின்றனர். இந்நிலையில் மத்திய மோடி அரசு ஏக்கருக்கு 23,250 ரூபாய் இன்சூரன்ஸ் வழங்க உத்தரவிட்டிருந்தது. அதற்க்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

```
```

இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற திமுக பால்வளத் துறை அமைச்சர் நாசர் தன்னிடம் முறையிட வந்த விவசாயி ஒருவரை இழுத்து தள்ளிய சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இந்த விஷயத்தில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கண்டிப்புடன் இருந்து மக்களை அவர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் பொதுமக்கள்.

………உங்கள் பீமா