Friday, March 24, 2023
Home > செய்திகள் > சரவணா ஸ்டோர்ஸ் ரெய்டு..! கைமாற்ற நெருக்கடி கொடுக்கும் மூத்த தலைவரின் குடும்பம்..!?

சரவணா ஸ்டோர்ஸ் ரெய்டு..! கைமாற்ற நெருக்கடி கொடுக்கும் மூத்த தலைவரின் குடும்பம்..!?

7-12-21/ 16.39 pm

சென்னை : பிரபல நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் குழுமங்களில் கடந்த டிசம்பர் 1 முதல் வருமானவரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. இதன் பின்னணியில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

சரவணா ஸ்டோர்ஸ் குழுமங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ.1000 கோடி வருவாயை மறைத்தது அம்பலமாகியுள்ளது. சூப்பர் சரவணா ஸ்டோர், சரவணா செல்வரத்தினம் தொடர்புடைய 37 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் 1000 கோடி வருவாய் ஈட்டியதும், ஜவுளி, நகை பிரிவில் ரூ.150 கோடிக்கு பொருட்கள் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போலியான விற்பனை ரசீதுகளை உருவாக்கி ரூ.80 கோடி வருவாயை மறைத்து இருப்பதும் தெரியவந்தது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
சோதனையில் ரூ.10 கோடி ரொக்கம், ரூ.6 கோடி மதிப்பிலான நகை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

`

இந்நிலையில் ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் இராஜகோபாலிடமிருந்து கைமாறியதை போல வளர்ந்து வரும் சரவணா ஸ்டோர்சை கைப்பற்ற ஒரு அரசியல் தலைவரின் குடும்பம் முயற்சிப்பதாகவும் இதனாலேயே ரெய்டு மற்றும் தொலைபேசி மிரட்டல்கள் வருவதாகவும் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

…உங்கள் பீமா