இந்த வருடம் இந்து அமைப்பினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் குண்டுவைக்க திட்டமிட்ட இஸ்லாமிய PFI உறுப்பினர்கள் அன்ஸாத் பத்ருதீன் மற்றும் பிரோஸ் கான் ஆகியோர் கடந்த பிப்ரவரியில் உத்திரபிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டு லக்னோ சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை சந்திக்க கேரளாவிலிருந்து பத்ருதீன் மனைவி முஹ்ஸினா அவனது அம்மா நரீமா, பிரோஸ் மனைவி சவுஜாத் மற்றும் உறவினரான குன்காலிமா ஆகிய நான்கு பெண்கள் லக்னோவிற்கு சென்றனர். அங்கு சிறை அதிகாரிகளிடம் கோவிட் டெஸ்ட் நெகடிவ் என போலியான சான்றிதழை கொடுத்திருக்கின்றனர்.
காசியாபாத்தில் உள்ள ஒரு ஆய்வகத்தில் சான்றிதழ் வாங்கியதாக தெரிவித்திருக்கின்றனர். சிறைத்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஆய்வகத்தில் விசாரணை மேற்கொண்டபோது அது போலி என தெரிய வந்தது. அதையடுத்து லக்னோவில் உள்ள கோசாய்கஞ்ச் தானா காவல் நிலையத்தில் இந்த நான்கு பெண்கள் மீதும் இந்திய தண்டனைச்சட்டம் 419 (ஏமாற்றுதல்), 420 (ஏமாற்றுதல் மற்றும் நேர்மையின்மை), 467 (மதிப்புமிக்க பாதுகாப்பை மோசடி செய்தல்) 468 (மோசடி நோக்கத்திற்காக மோசடி) மற்றும் 461 (நேர்மையற்ற குற்றவாளி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் மூன்று பேரை காவல்துறை கைது செய்தது. ஒரு பெண் தப்பித்து ஓடிவிட்டார். பெரோசின் மனைவி தனது நான்கு குழந்தைகளுடன் லக்னோ வந்திருக்கிறார். அந்த குழந்தைகளை அவர்களது வழக்கறிஞரான நசீருடன் காவல்துறையினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.
காவல்துறையிடமே போலி சான்றிதழ் கொடுத்த இந்த சம்பவம் உத்திரபிரதேசத்தில் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.
……உங்கள் பீமா
#pfi #lucknow #uttarpradesh #kerala