Monday, December 2, 2024
Home > செய்திகள் > தமிழ் கூறும் நல்லுலகத்தை அதிரவிட்ட சீமான்..! என்னென்ப ஏனைய என்ற திருக்குறளுக்கு விளக்கம் கொடுத்த சீமான்

தமிழ் கூறும் நல்லுலகத்தை அதிரவிட்ட சீமான்..! என்னென்ப ஏனைய என்ற திருக்குறளுக்கு விளக்கம் கொடுத்த சீமான்

என்னென்ப ஏனைய என்ற திருக்குறளுக்கு அர்த்தம் ஆடு மாடுகளை வேட்டையாடி உண்ணவேண்டும் என்பதா..! தமிழ் கூறும் நல்லுலகத்தை அதிரவிட்ட சீமான்..!

நாம்தமிழர் எனும் கட்சியின் தலைவராக இருப்பவர் சைமன் செபாஸ்டியன் என்கிற சீமான். இவரும் சர்ச்சைகளும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள். அதிலும் பாலியல் சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமானவர் என திமுகவினர் மட்டுமல்லாமல் அனைத்து அரசியல் கட்சிகளும் விமர்சனம் செய்கின்றன.

அண்ணன் சீமான் உரக்க கத்தி அடித்தொண்டையிலிருந்து பேசும்போது கேட்கும் கரகோஷம் வானிலிருந்து இடி இறங்கிவிட்டதாக எண்ண தோன்றும். அந்த அளவுக்கு உண்மையற்ற விஷயங்களை உரக்க கூறுவதில் வல்லவர். இவரின் கதைகளை கேட்டே வளைந்த தம்பிகள் ஏராளம் என கம்யூனிஸ்டுகள் சிலர் கிண்டலடிக்கின்றனர்.

`
https://twitter.com/MadrasTelegram/status/1444291781722394633?s=20

இந்நிலையில் திருவள்ளுவரை வம்புக்கு இழுத்திருக்கிறார் செபாஸ்டியன் சைமன். அதிலும் எண்ணென்ப ஏனைய எழுத்தென்ப என்ற குறளுக்கு இவர் கொடுத்த விளக்கம் அபாரம். ” என்னென்ப என்ற வார்த்தைக்கு முன்பாக எடுத்தென்ப என்பது தான் வந்திருக்க வேண்டும். குறிஞ்சி திணையிலிருந்து இறங்கி முல்லை நிலத்தில் வாழும்போது ஆடு மாடுகளை வேட்டையாடி உண்ணவேண்டும் என எண்ணம் வந்துவிட்டதாக திருவள்ளுவர் கூறுகிறார்” என புதிய விளக்கத்தை இந்த தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தந்திருக்கிறார் செபாஸ்டியன் சைமன்.

```
```

….உங்கள் பீமா

#ntk #seeman #thiruvalluvar