21-1-22/15.00pm
சென்னை : சினிமாத்துறையில் பணிபுரிந்த பயில்வான் ரங்கநாதன் என்பவர் நடிகர் நடிகைகளின் வீடெங்கும் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்ணால் கண்டது போல கட்டுக்கதையை அள்ளிவிடுவதில் வல்லவர்.

தமிழ்திரைப்படங்களில் சிறுசிறுவேடங்களில் நடித்து வந்த அவர் மெல்ல மெல்ல வாய்ப்புக்களை இழந்ததும் தன்னை சினிமா விமர்சகர் என கூறிக்கொண்டு தனியார் செய்திநிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அடுத்தவரின் அந்தரங்கத்தில் மூக்கை நுழைக்க ஆரம்பித்தார். தனது வாய்க்கு வந்தபடி கிசுகிசுக்களை நக்கீரன் போன்ற நீலபத்திரிக்கை போல பேச ஆரம்பித்தார்.

அதில் உச்சகட்டமாக தமிழசினிமாவின் உச்சநட்சத்திரமான ரஜினிகாந்த் அவர்களின் நன்மதிப்பை குலைக்கும் பொருட்டு அவரது மூத்த மகளான ஐஸ்வர்யாவை குடிகாரி என்பது போலவும் இசையமைப்பாளர் அனிருத்துடன் மிக நெருக்கமாக இருக்கிறார் என்றும் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதோடு நில்லாமல் தனுஷை காமுகன் என ஆங்கிலத்தில் பாடி டிமாண்ட் என நாசூக்காக குறிப்பிட்டுள்ளார்.

இதோடு நில்லாமல் அமலாபால் விவகாரத்தையும் உள்ளே இழுத்து தனுஷ் செல்வராகவன் ரஜினிகாந்த் கமலஹாசன் சுருதி ஹாசன் என அனைவரயும் கலந்து ஒரு திரைக்கதையை உருவாக்கி வீடியோ வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. பயில்வான் ரங்கநாதன் சொல்வதெல்லாம் உண்மைக்கு மாறானது என நிரூபிக்கும் வகையில் ஒரு விஷயத்தை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த ஒரு பேச்சே அவர் சொல்லிய அனைத்தும் கட்டுக்கதை என்பதை வெளிக்காட்டியுள்ளது. அந்த வீடியோவின் ஏழாவது நிமிடத்தில் அவர் கூறியது ” மூன்று திரைப்படத்தை பற்றி தனுஷை பிரதமர் மோடியே கூப்பிட்டு பாராட்டினார்” என கூறியுள்ளார்.
ஆனால் 2011 ல் ஜப்பானிய பிரதமர் யோஷிஹிகோ நோடோவுக்கு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் இரவு விருந்து வழங்கினார். அதில் தனுஷ் அழைக்கப்பட்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் தனுஷ் கொலைவெறி எனும் சமூக கருத்துமிக்க இளைஞர்களை நல்வழிப்படுத்தும் பாடல் ஒன்றை பாடினார். அந்த பாடலை பிரமித்து வாய்பிளந்து ஆஹா ஓஹோவென புகழ்ந்து தள்ளினார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள்.
இந்த செய்தியை வழக்கம்போல பயில்வான் ரங்கநாதன் திரித்து கூறியுள்ளது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சினிமாத்துறையில் இருந்துகொண்டு உண்மைக்கு மாறாக பயில்வான் பேசிவருவதாக சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
…..உங்கள் பீமா