அஞ்சுமன் இஸ்லாமியா பைசூல் உலூம் மதரஸா சார்பில் அலஹாபாத் உயர்நீதி மன்றத்தில் உத்திரபிரதேச அரசுக்கு எதிராக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் ” மதரசா பள்ளிகளில் மேலும் பணிக்கு ஆட்களை நியமிக்க வேண்டும். புதிய பொறுப்புக்களை பதவிகளை ஏற்படுத்த வேண்டும். இதனால் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் கூடும். ஆனால் அரசு புதிய பணியாளர்கள் நியமிக்க தடைவிதித்துள்ளது.
மதரஸா மற்றும் மாணவர்களின் எதிர்காலம் கருதி புதிய பணியாளர்களை நியமிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த அஜய் பானாட் தலைமையிலான அமர்வு உத்திர பிரதேச அரசை கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டது.
நீதிபதி அஜய் பானாட் ” இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் முன்பு அரசு தரப்பிடம் விளக்கங்களை எதிர்பார்க்கிறோம், அரசு உதவி பெரும் பள்ளிகள் கல்லூரிகள் எத்தனை அவற்றிற்கு வழங்கப்படும் நிதி எவ்வளவு, மதசார்பின்மை என்ற பெயரில் மதரஸா உள்ளிட்ட மத அமைப்புகளுக்கு அரசு சார்பில் நிதி வழங்க ஏதேனும் சட்டம் உள்ளதா,
மதம் சார்ந்த சிறுபான்மை அமைப்புகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்குறீர்கள் என விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க அரசுக்கு உத்தரவிடுகிறேன்” என கூறினார். மேலும் மதரஸா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் விளையாட்டு அரங்கம் என தனியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் அரசிடம் அறிக்கை விவரம் கேட்டுள்ளது.