Wednesday, April 17, 2024
Home > செய்திகள் > யார் அந்த தனி நாடு கேட்ட ஜான்..!? பின்னணியில் மிஷனரி..!? விலகிய மர்மம்..!?

யார் அந்த தனி நாடு கேட்ட ஜான்..!? பின்னணியில் மிஷனரி..!? விலகிய மர்மம்..!?

13-12-21/16.48

திருச்சி: கருத்து கூறினாலே கைது செய்யப்படும் தமிழக திமுக ஆட்சியில் தைரியமாக நாட்டை துண்டாட வேண்டும் என கூறிய ஜான் அசோக் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஆவார்.

திருச்சி பெரம்பலூர் பகுதியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக ரோவர் எஜுகேஷனல் இன்ஸ்டிட்யூட் எனும் கிறித்தவ நிறுவனம் இயங்கி வருகிறது. இதை உருவாக்கியவர் ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர். கடந்த முப்பது வருடங்களுக்கு முன் மரணமடைந்து விட்டார். இந்த கிறித்தவ அமைப்பின் கீழ் CBSE பள்ளிகள் ஸ்டேட்போர்டு பள்ளிகள் இயங்கி வருகின்றன. மேலும் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளும் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

இதன் சேர்மனாக இருப்பவர் வரதராஜன். இவர் மதிமுக கட்சியில் மாநில பொறுப்பில் இருக்கிறார். இவரது மகனான ஜான் அசோக் காங்கிரஸ் பிரமுகராக உள்ளார். மேலும் அந்த கிறித்தவ அமைப்பின் நிர்வாக இயக்குநராக இருப்பதாக கூறப்படுகிறது.

`

இந்நிலையில் கடந்த வருடம் அவரது கல்லூரி வளாகத்தின் அருகே இருந்த விநாயகர் கோவில் இடையூறு ஏற்படுத்துவதாக கூறி இடித்து தள்ளியதாக பெரம்பலூர் மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அதே வளாகத்தின் அருகில் பெரிய சர்ச் ஒன்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சமூகத்தில் பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு தரமற்ற பதிவிட்ட ஜான் அசோக்கிற்க்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. மேலும் பெரம்பலூரை சேர்ந்த சத்ய பிரபு என்பவரால் காவல் நிலையத்தில் இது குறித்து புகாரளிக்கப்பட்டுள்ளது.

```
```

தேசம் குறித்த அவதூறான பேச்சுக்களை கண்டால் குண்டாஸ் போடும் திமுக அரசு ஜான் அசோக் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்க போகிறது என பெரம்பலூர் பிஜேபியினர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

……உங்கள் பீமா