“கிறித்தவ மிஷனரிகள் முன்பெல்லாம் வயதானவர்கள் உடல் ஊனமுற்றவர்கள் என அவர்களை மேடையில் பேசவிட்டு நடிக்க வைத்து மற்றவர்களை மதம் மாற்றினார்கள். ஆனால் இப்போது சிறு குழந்தைகளையும் மதமாற்றத்திற்கு பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்” என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பஞ்சாபை சேர்ந்த பாஸ்டர் பஜிந்தர் சிங் என்பவர் ஒரு சிறுவனை கிறித்தவ சபை மேடையிலேயே துன்புறுத்தினார். அது அப்போது பரவலாக பேசப்பட்டது. பேசமுடியாத சிறு பெண்ணை பேச வைத்து நாடகமாடியாதாக புகார் எழுந்தது.
அதையடுத்து அன்ஹுல் சக்சேனா என்ற சமூக ஆர்வலர் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் இது குறித்து புகார் ஒன்றை அனுப்பினார். இதையறிந்த பாஸ்டர் பஜிந்தர் சிங் அந்த சிறுமியின் தாயாரை மிரட்டி அன்ஹுல் சக்சேனா மீது குற்றம் சாட்டும்படி நிர்பந்தித்ததாக தெரிகிறது.
அதையடுத்து அந்த சிறுமியின் தயார் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ஆங்காங்கே வெட்டி ஒட்டப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த வீடியோவில் தனது பேச முடியாத பெண்ணிற்கு பாஸ்டர் தான் பேசும் சக்தியை கொடுத்ததாகவும், அன்ஹுல் சக்சேனா வேண்டுமென்றே பாஸ்டர் மீது அவதூறு கருத்துக்களை வெளியிடுவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.” எனவும் கூறியிருக்கிறார்.
இதற்கு பதிலளித்த சக்சேனா ” சிறுவர் சிறுமியர்களை மதமாற்றத்திற்கு பயன்படுத்திடுவது தவர். மேலும் தவறான நம்பிக்கையை சமூகத்தில் பரப்ப அனுமதிக்க முடியாது. நீங்கள் வழக்கு தொடுக்க வேண்டுமெனில் தாராளமாக தொடுக்கலாம். நான் எதிர்கொள்ள தயாராயிருக்கிறேன்.
2019ல் டிடி பஞ்சாப் அரசு தொலைக்காட்சியில் இந்த பாஸ்டரின் மதமாற்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. அப்போதே டிடி பஞ்சாப் தொலைக்காட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வைத்தேன். அதனால் பழிவாங்கும் உணர்ச்சியோடு மிஷனரிகள் என் மீது புகார் தெரிவித்துள்ளதோடு என் மீது வழக்கு போடுவதாக மிரட்டுகிறார்கள். நான் சந்திக்க தயாராக உள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நேற்று சமூக வலைதளத்தில் “IStandWithAnshulSaxena” என ட்ரெண்ட் ஆனது.மத்திய மாநில அரசுகள் இந்த மதமாற்ற கும்பலுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்குமா என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.
….உங்கள் பீமா