28-11-21/16.09pm
சென்னை : தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னை தத்தளித்து வருகிறது. பல முக்கியமான பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த நாற்பத்தியெட்டு மணிநேரமாக மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இறந்தவரின் உடலை எடுக்க கூட அமரர் ஊர்தி உள்ளே வர முடியாத அவலநிலைக்கு சென்னை தள்ளப்பட்டுள்ளது.
சென்னையின் தற்போதைய நிலைமை மக்களை மீண்டும் 2015 நிகழ்வுக்கு கொண்டு சென்றுவிடுமோ என மக்கள் அணிஜியிருக்கிறார்கள். இந்தியாவின் சிறந்த மற்றும் முதன்மை முதல்வரான முக் ஸ்டாலின் தனது கோட்டையான சென்னையை ஓட்டையிட்டுவிட்டார் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் தாம்பரம் பகுதியை சேர்ந்த கூடுவாஞ்சேரி முடிச்சூர் வண்டலூர் மற்றும் சில பகுதிகளில் ஆள் உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன. இதனிடையே சென்னை எஸ்.கொளத்தூர் பகுதி காகித புரத்தில் ஒருவர் மழை காரணமாக அகால மரணமடைந்துவிட்டார்.
இறந்தவரது உடலை எடுக்க அமரர் ஊர்தி உள்ளே வர இயலாத அளவுக்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் குடும்பத்தினர் ஒரு டிராக்டர் மூலம் இறந்தவரின் உடலை மின்மயானத்துக்கு எடுத்து செல்லும் வீடியோ பார்ப்பவர் நெஞ்சை உலுக்கியது.
….உங்கள் பீமா