Thursday, June 20, 2024
Home > செய்திகள் > போவியா..! போவியா..!? சபரிமலை பிந்துவை பந்தாடிய வாலிபர்..!

போவியா..! போவியா..!? சபரிமலை பிந்துவை பந்தாடிய வாலிபர்..!

6-1-22/15.00pm

கேரளா : சபரிமலைக்கு சென்ற இரண்டு பெண்களில் ஒருவரான பிந்து என்பவர் பந்தாடப்பட்டது பரபரப்பை கிளப்பியுள்ளது.

கடந்த 2019ல் உச்சநீதிமன்றம் அனைத்து பெண்களும் சபரிமலை செல்லலாம் என தீர்ப்பளித்திருந்தது. அதையடுத்து இடதுசாரி ஆதரவு பெண்கள் சிலர் சபரிமலைக்கு சென்றனர். அதில் சிலர் சபரிமலை அடிவாரத்திலேயே மடக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர். தமிழகத்தில் இருந்து மனிதி எனும் அமைப்பில் இருந்து 11 பெண்கள் சென்றனர். அவர்களுக்கு கனிமொழி உட்பட பலர் வாழ்த்துகள் தெரிவித்திருந்தனர்.

மேலும் மாதவி, பிந்து அம்மினி, கவிதா ஜாக்குலா, திருப்தி தேசாய், ரெஹானா பாத்திமா, மேரி ஸ்வீட்டி, சுஹாசினி மற்றும் லிபி, கனகதுர்கா ஆகியோர் சபரிமலைக்குள் வலுக்கட்டாயமாக நுழையமுயன்று விரட்டியடிக்கப்பட்டனர். இதில் மாதவி எனும் ஆந்திரப்பெண் நிலக்கல் வரை சென்றார். அங்கு பக்தர்கள் நடத்திய போராட்டத்தால் முன்னேற முடியாமல் திரும்பினார்.

`

இதில் கனகதுர்கா என்பவரது மகள் லவ்ஜிஹாத்திற்க்கு ஆளாகிவிட்டாள் என கூறப்படுகிறது. இந்நிலையில் சபரிமலைக்கு சென்ற பிந்து அம்மிணி வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது வழக்கு விஷயமாக நேற்று கோழிக்கோடு சென்றிருந்தார்.

```
```

அங்கு வடக்கு கடற்கரையோரம் வசமாக சிக்கிய அவரை போவியா போவியா என கூறி பொளந்து தள்ளினார் ஒரு வாலிபர். இந்த சிசிடிவி காட்சி பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியது.

மேலும் தாக்கிய வாலிபரை போலிசார் கைது செய்துள்ளனர். அவர்மீது கடும்வழக்கு பதியாமல் பிணைவழக்கில் பதிந்திருப்பதாக புலம்பிவருகிறார் பிந்து.

…..உங்கள் பீமா