6-1-22/17.00pm
மயிலாடுதுறை : திமுக உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சரான சக்ரபாணி மேம்போக்கான அறிக்கையை வெளியிட்டு கரும்பு விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல இடங்களில் செங்கரும்பு பயிரிடப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச தொகுப்பு வழங்கப்பட்டது. அதில் செங்கரும்பும் ஒன்று. இதனால் பெருவாரியான கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதனால் வங்கிக்கடன் நகைக்கடன் மூலமாக நிதி ஈட்டி கரும்பு சாகுபடி செய்தனர். கடந்த ஆட்சியில் எந்த ஒரு இடைத்தரகரும் இல்லாமல் நேரடியாக உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகளே நேரடியாக வந்து விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்தனர்.

ஆனால் காலம் மாறியது. திமுக அரியணை ஏறியது. இந்த வருடம் கூட்டுறவு சங்கம் மூலமாகவே கொள்முதல் செய்யப்படும் என திமுக அரசு அறிவித்தது. அதை நம்பிய விவசாயிகள் சாகுபடியை தொடர்ந்தனர். இதனிடையே இடைத்தரகர்கள் விவசாயிகளை அணுகி மிக மிக குறைவான விலையை நிர்ணயிக்க நொந்து போன விவசாயிகள் அமைச்சரிடம் முறையட்டிருக்கின்றனர்.
கரும்பின் விலை 33 ரூபாயாக வழங்கப்படும் என முன்னரே அறிக்கை வெளியிட்டு விட்டதாக அமைச்சர் தரப்பில் சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதை நம்பிய விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் தாங்கள் பயிரிட்ட கரும்புகளை இறக்கியிருக்கின்றனர்.

ஆனால் அங்குள்ள இடைத்தரகர்கள் கரும்பு ஒன்றின் விலை 14-15ரூபாய் என நிர்ணயித்திருக்கின்றனர். இதில் இடைத்தரகர்கள் அனைவரும் அந்தந்த திமுக மாவட்ட பொறுப்பில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பயிரிட்ட கரும்புக்கான உரியவிலை கிடைக்காமல் கரும்பு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். தங்கள் வாழ்வாதாரத்தை திமுகவினர் அழிப்பதாக விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை தனது பதிவில் “மிகவும் வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. அறிவாலயம் வேளாண் சட்டங்களை ஏன் எதிர்க்கிறது என இப்போது தெரிய வந்துள்ளது. தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
…..உங்கள் பீமா