Friday, April 19, 2024
Home > அரசியல் > நவ.14 அமித்ஷா தலைமையில் கூடும் தென்மண்டல கவுன்சில் கூட்டம்..! புறக்கணிக்கப்படுவாரா ஸ்டாலின்..!

நவ.14 அமித்ஷா தலைமையில் கூடும் தென்மண்டல கவுன்சில் கூட்டம்..! புறக்கணிக்கப்படுவாரா ஸ்டாலின்..!

5-11-21/ 13.40PM

நவம்பர் 14 அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற இருக்கிறது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் புறக்கணிக்கப்படலாம் என்ற ஊகங்கள் கிளம்பியுள்ளது.

தென்மண்டல கவுன்சில் கூட்டம் திருவனந்தபுரத்தில் 2016இலும் 2018ல் பெங்களூருவிலும் நடைபெற்றது. இந்த வருடத்திற்கான 29ஆவது கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்தது. கொரோனா சூழ்நிலைகளால் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் வருகிற 14 ம் தேதி திருப்பதியில் கூட்டம் நடைபெறுவது உறுதியாகிவிட்ட நிலையில் தெலுங்கானா ஆந்திர முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதாக அறிவித்துவிட்டனர். பினராயி விஜயன் மற்றும் முக ஸ்டாலின் ஆகியோர் இதுபற்றி எதுவும் இதுவரை அறிக்கை வெளியிடவில்லை. கேரளா மாநில தரப்பில் பினராயி விஜயன் கலந்து கொள்ளப்போவதாக தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

`

மேலும் தென்மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் துணை நிலை ஆளுநர்கள் என பலரும் அழைக்கப்பட்டிருக்கின்றனர். அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்ச தீவு துணைநிலை ஆளுநர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசுடன் மோதல் போக்கில் ஈடுபட்டுவரும் திமுகவும் அழைக்கப்பட்டிருக்கிறது. வளைகாப்பை காரணம் காட்டி GST கூட்டத்திற்கு நிதியமைச்சர் செல்லாமல் இருந்தது போல முக ஸ்டாலினும் செல்ல மறுப்பார் என்றே திமுக வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

```
```

ஒருவேளை தமிழக தரப்பில் முக ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை என்றால் மத்திய அரசுடன் மாநில அரசு கடைப்பிடித்து வரும் பிணக்கம் வெளிச்சத்துக்கு வந்துவிடும். அதனால் வதந்திகள் பரவுவதை தவிர்க்க முக ஸ்டாலின் செல்வார் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

…..உங்கள் பீமா

amit sha council meeting tamilnadu andhra thiruppathi