27-1-22/15.35PM
கேரளா : கோழிக்கோடு இரட்டை வெடிகுண்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரை இன்று கேரள உயர்நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என கூறி விடுதலை செய்துள்ளது.
கேரளமாநிலம் கோழிக்கோட்டில் 2006 மார்ச் 3 அன்று கே.எஸ்.ஆர்.டி.சி மற்றும் மொபசல் பேரூந்துநிலையங்களில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. அதில் இருவர் காயமடைந்தனர். மேலும் பல வணிக நிறுவனங்கள் கடைகள் பெரும்பாதிப்புக்குள்ளாயின. இந்த வழக்கில் கே.பி யூசுப், மொஹம்மத் அசார் தடயண்டவிடா நசீர், ஷபாஸ் உள்ளிட்டோர் NIA வால் கைது செய்யப்பட்டனர். மேலும் மூன்று பேர் தலைமறைவாக உள்ளனர்.
2003 ல் நடந்த மராட் கலவரத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என NIAவால் சந்தேகிக்கப்பட்டது. இந்த வழக்கு கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக நடந்துவந்த நிலையில் NIAவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த கேரள உயர்நீதிமன்றம் ஷபாஸ் மற்றும் தடயண்டவிடா நசீர் ஆகிய இருவரையும் விடுவித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும் அப்துல் அபூபக்கர் யூசுப் ஆகிய இருவரை கடந்த சிலமாதங்களுக்கு முன்னரே விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என டிவிஷன் பென்ச் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் இதை எதிர்த்து NIA தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
….உங்கள் பீமா