Tuesday, October 15, 2024
Home > அரசியல் > உண்மை கண்டறியும் குழு..! குழுவில் இவருமா..!? அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை..!

உண்மை கண்டறியும் குழு..! குழுவில் இவருமா..!? அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை..!

சென்னை: மதமாற்ற விவகாரத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட அரியலூர் மாணவி பிரச்சினை தற்போது தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதற்காக உண்மை கண்டறியும் குழுவை பிஜேபி நியமித்துள்ளது.

தேசிய அளவில் மாணவி மதமாற்றத்தால் பலியான விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழக மீடியாக்கள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த விவகாரத்தை திசைதிருப்ப முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குடியரசுதின அலங்கார ஊர்தி விவகாரம் அலங்கார ஊர்தியில் பெரியார் சிலை என திமுக தன் பங்குக்கு முயன்ற நிலையில் கோயம்புத்தூர் சர்ச்சில் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரம் மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்கவில்லை என தமிழக ஊடகங்களும் தமது பங்குக்கு மாணவி விவகாரத்தை திசைதிருப்ப முயன்று வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

`

இந்நிலையில் தேசிய அளவில் மக்களிடையே கட்டாய மதமாற்ற முயற்சியால் இறந்த மாணவி விவகாரம் பெருத்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உண்மைகண்டறியும் குழு ஒன்றை பாஜக தேசியதலைவர் ஜேபி.நட்டா நியமித்துள்ளார்.

இந்த குழுவில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் வைஜெயந்தி ஐபிஎஸ் என பெயர்பெற்ற டாக்டர் விஜயசாந்தி இடம்பெற்றுள்ளார்.

```
```

மேலும் மத்தியபிரதேச எம்பி சந்தியா ராய், மகாராஷ்டிராவை சேர்ந்த .சித்ரா தாய்வக் மகூறும் கர்நாடகாவை சேர்ந்த கீதா விவேகானந்தா ஆகிய நான்கு பேர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

…..உங்கள் பீமா