Sunday, December 3, 2023
Home > அரசியல் > அடுத்தடுத்து கழறும் பிஜேபி விக்கெட்டுகள்..! என்ன செய்கிறார் நட்டா..!

அடுத்தடுத்து கழறும் பிஜேபி விக்கெட்டுகள்..! என்ன செய்கிறார் நட்டா..!

மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த பிறகு பிஜேபி சார்பில் நின்று ஜெயித்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் திரிணமூல் காங்கிரசுக்கு மாறினர். ஆனால் யாரும் பதவி விலகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல பாடகரும் பிஜேபி எம்பியுமான பாபுல் சுப்ரியோல் கடந்த மாதம் பிஜேபியிலிருந்து விலகி திரிணாமூலில் சங்கமமானார். தற்போது அதே பாணியில் திரிபுராவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் TMCக்கு செல்கிறார்.

திரிபுரா மாநிலத்தை பிப்லப் குமார் டெப் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. 60 தொகுதிகள் கொண்ட இம்மாநிலத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பிஜேபி கூட்டணி 43 இடங்களை கைப்பற்றியது. இதில் சுர்மா (தலாய்)தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஆசிஷ் தாஸ் கடந்த வாரம் திரிணாமூல் தலைவர் அபிஷேக் பானெர்ஜியை சந்தித்ததாக கூறப்படுகிறது.

`

அதன் பிறகு இன்று அவர் கொல்கத்தா சென்றிருக்கிறார். மம்தாவுடனான சந்திப்புக்காக காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி தொடர்ந்து பிஜேபி விக்கெட்டுகள் சாய்வது பிஜேபிக்குள் சலசலப்பை உண்டுபண்ணியுள்ளது.

தேசிய தலைவர் நட்டா மாநில தலைவர்கள் மற்றும் அடுத்த கட்ட தலைவர்களுடன் தொடர்பிலிருக்கிறாரா இல்லையா என தொண்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அடிமட்ட தொண்டர்கள் களப்பணியில் ஈடுபட்டு தங்கள் உழைப்பை கட்சிக்காக கொடுக்கின்றனர். அதை தலைமை கருத்தில் கொள்ளவேண்டும் என தொண்டர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

```
```

….உங்கள் பீமா

#jpnadda #asishdas #tirinamoolcongress