28-12-21/12.53pm
மஹாராஷ்டிரா : புகழ்பெற்ற பழமையான இந்து கோவிலின் முன் நடப்பட்ட கிறித்தவ கல் ஒன்று தற்போது மும்பையில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே தாதர் எனுமிடத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற ப்ரபாதேவி ஆலயம். இது பிரபாவதி ஆலயம் என்றும் பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. 12ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த திருத்தலம் 1715 ல் புனரமைக்கப்பட்டது. இந்த கோவிலில் சாகம்பரி தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த கோவிலில் திடீரென வாசல் முன்பு யாரோ புனித தாமஸ் கல் என குறிப்பிட்டு ஒரு கல்லை நட்டுவிட்டு சென்றிருக்கின்றனர். இதற்க்கு யார் அனுமதி கொடுத்தது என பக்தர்கள் கேள்வியெழுப்பினால் மாநகராட்சி நிர்வாகத்தை கைகாண்பிக்கிறார்கள் அங்குள்ள வியாபாரிகள்.

ஏற்கனவே சிவசேனா தனது தனித்தன்மையை இழந்து வரும் நிலையில் இரு பிரிவினருக்கிடையே மோதல் உருவாகும் வகையில் நடப்பட்ட இந்த கல்வெட்டு மஹாரஷ்டிராவில் பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து பாஜக தலைவர் பிரதிக் என்பவர் ” மதமோதலை உருவாக்கும் விதத்தில் இந்த கல்வெட்டை கோவிலின் வாசல் முன் நடுவதற்கு யார் அனுமதி கொடுத்தது.

இந்த கல்வெட்டை சிவசேனா அரசு உடனடியாக நீக்கி மோதல் வரவிடாமல் நடவடிக்கை எடுக்கவேண்டும். சிவசேனா இந்துக்களுக்கு எதிராக செயல்படும் மனநிலைக்கு சென்றுவிட்டது” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
….உங்கள் பீமா