Tuesday, October 15, 2024
Home > அரசியல் > அண்ணாமலையை முடிந்தால் கைது செய்து பாருங்கள்..! உசுப்பேற்றும் அதிமுக தலைவர்..!?

அண்ணாமலையை முடிந்தால் கைது செய்து பாருங்கள்..! உசுப்பேற்றும் அதிமுக தலைவர்..!?

17-12-21/13.05pm

தமிழகம் : திமுக அரசின் செய்லபாடுகளை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதில் தமிழக தலைவர் அண்ணாமலையை முடிந்தால் கைது செய்யுங்கள் பார்க்கலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலும் சேலத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் நடைபெற்றுவருகிறது. இதில் அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் திரளாக கலந்துகொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் ” சேலம் என்றால் அது அதிமுகவின் கோட்டை. அதை யாராலும் அசைத்து பார்க்க முடியாது. அதிமுக தொண்டனை கூட தொட முடியாது. நாங்கள் அம்மா சிமெண்ட் கொடுத்தோம். அதையே பெயர் மாற்றி விலை அதிகப்படுத்தி வலிமை சிமெண்ட் என மக்கள் தலையில் கட்டுகிறார்கள். இன்னும் இரண்டரை ஆண்டுகள் தான் திமுக ஆட்சியில் இருக்கும்.

`

ஒரே நாடு ஒரே தேர்தல் என பிரதமர் மோடி கூறியிருப்பது ஸ்டாலினுக்கு நினைவிருக்கட்டும். தமிழத்தின் முதலவர் பொம்மை முதல்வராகவே இருக்கிறார். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. சென்னை கனமழையில் மிதந்த போது டி குடித்தார். போட்டோவுக்கு போஸ் குடுத்தார். ரெயின் கோட் போட்டு ஊர் சுற்றினார். போய்விட்டார்” என திமுகவை கடுமையாக விமர்சித்தார். மேலும் செல்லூர் ராஜு கூறுகையில் ” இது பாஸ்ட் புட் காலம் என்பதால் உடனே அமைச்சராக துடிக்கிறார்கள்” என உதயநிதியை மறைமுகமாக சாடினார்.

முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் பேசுகையில் ” முக ஸ்டாலின் விடியா அரசு சர்வாதிகாரப்போக்கில் செயல்படுகிறது. கருத்து கூறினாலே கைது என அராஜக போக்கில் செயல்படுகிறது. எங்கே மாரிதாஸை கைது செய்தது போல தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை மீது கைவைக்க சொல்லுங்கள். அவரை கைது செய்யுங்கள் பார்க்கலாம்” என உணர்ச்சி பொங்க பேசினார்.

```
```

நெட்டிசன்கள் இது குறித்து கிண்டலடித்து வருகின்றனர். வடிவேலு பாணியில் நாபாட்டுக்கு சிவனேன்னு தானடா இருந்தேன். என்னய ஏண்டா கோத்துவிடறீங்க என்று சொல்வது போல மீம்களை பதிவிட்டு அதிமுகவினரை சீண்டிவருகின்றனர்.

…..உங்கள் பீமா