Saturday, September 24, 2022
Home > செய்திகள் > குறிவைக்கப்படும் கோயம்புத்தூர்..! பழிவாங்குகிறதா திமுக..!?வெளியான ஆதாரங்கள்..!

குறிவைக்கப்படும் கோயம்புத்தூர்..! பழிவாங்குகிறதா திமுக..!?வெளியான ஆதாரங்கள்..!

6-12-21/10.26am

கோயம்புத்தூர் : திமுகவின் செயல்பாடுகள் கொங்கு மண்டலத்திற்கு எதிராக இருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதற்கேற்றாற்போல கோயம்புத்தூரில் இருக்கும் தொழில் வளங்களை முடக்கும் செயலில் திமுக ஈடுபட்டு வருவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

கொங்கு மண்டலம் சிறு குறு தொழில்கள் மற்றும் விவசாயம் என அனைத்தையும் ஒருசேர கொண்ட சிறப்புமிகுந்த மாவட்டம் ஆகும். சென்னையை தவிர்த்து இயற்கையோடு ஒன்றி தொழில்செய்யும் நகரங்களில் இந்தியாவில் முதன்மையான மாவட்டங்களுள் கொங்கு மண்டலமும் ஒன்று. இந்நிலையில் கோயம்புத்தூர் மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் திமுக செயல்பட்டுவருவதாக பகீர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கோயம்புத்தூர் வெட் கிரைண்டர் தயாரிப்புக்கு பெயப்பெற்றது. இந்த தொழிலை நம்பி கிட்டத்தட்ட 60000 பேருக்கும் மேலானோர் வாழ்ந்து வருகின்றனர். இந்த வெட்கிரைண்டர்களுக்கு தேவையான கற்கள் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் மட்டுமே கிடைக்கிறது. தற்போது திமுக அரசு முப்பத்தைந்து குவாரிகளை மூடியுள்ளது.

இதனால் வெட் கிரைண்டர் தயாரிப்பு தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஜனவரி மதம் முதல் இந்த தொழில் முழுவதுமாக நிறுத்தப்பட்டுவிடும் என தொழில் நிறுவனங்கள் அச்சம் தெரிவிக்கின்றன. மேலும் ஒரு சாதாரண குடிசை தொழில் பார்க்கும் குடிமகனுக்கு ஐம்பது லட்சம் அபராதம் விதித்து நேர்மையை நிலைநாட்டியிருக்கிறது திமுக அரசு.

கொங்குமண்டலம் திமுகவை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் பலவகைகளில் பழிவாங்கப்படுகிறது என சிறுதொழில் முனைவோர் சங்கம் விமர்சனத்தை முன்வைக்கிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்து ஐம்பதாயிரம் குடும்பங்களில் விடியலை தரவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. பழிவாங்கும் நடவடிக்கைகளில் திமுக ஈடுபடகூடாது என நடுநிலையாளர்கள் கூறிவருகின்றனர்.

……உங்கள் பீமா

இதர செய்திகள்  சமிக்ஞை மொழியில் பேசி பாகிஸ்தானை சாய்த்த இந்திய கடற்படை..! கடற்படைதின சிறப்புக்கட்டுரை..!

Leave a Reply

Your email address will not be published.

error: Content is Protected! © The Madras Telegram