Thursday, June 20, 2024
Home > செய்திகள் > ஆசிரியையின் அட்டூழியம்..! கோலம் போட்டதால் விரட்டப்பட்ட அபலை குடும்பம்..?

ஆசிரியையின் அட்டூழியம்..! கோலம் போட்டதால் விரட்டப்பட்ட அபலை குடும்பம்..?

02-02-2022/12.40pm

சென்னை : வீட்டில் கோலம் போட்டதால் ஒரு குடும்பமே வீட்டை விட்டு துரத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறித்தவப்பள்ளியில் கட்டாய மதமாற்றத்தால் மாணவி ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள பிரபலமான சீயோன் (ZION) பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிபவர் மேரி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் குரோம்பேட்டை நெமிலிச்சேரி பகுதியிலுள்ள மெல்ஷியா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இதே குடியிருப்பில் ஒரு இந்து குடும்பம் ஒன்று வசித்து வருகிறது. மூன்று வீடுகள் கொண்ட அந்த குடியிருப்பில் இரண்டு கிறித்தவ குடும்பமும் ஒரு இந்து பிராமண குடும்பமும் வசித்து வருவதாக தெரிகிறது.

`

சம்மந்தப்பட்ட பிராமண பெண்மணி வாசலில் கோலம் போட்டதாகவும் கார்த்திகை தீபம் ஏற்றியதாகவும் அதனால் அந்த ஆசிரியை கோபமடைந்து பிரச்சினை கொடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் அந்த ஆசிரியை இந்த மீது காவல்துறையில் புகாரளித்ததாகவும் தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

```
```

சம்பந்தப்பட்ட ஆசிரியையை தொடர்புகொள்ள முயன்றபோது பதிலளிக்க மறுத்துவிட்டார். ஆசிரியை தரப்பில் கருத்து கூற விரும்பவில்லை என தெரியவருகிறது. மேலும் அந்த குடியிருப்பின் அருகில் விசாரித்த பொழுது ஆசிரியை தீவிர கிறித்தவர் என்றும் அக்கம்பக்கத்தினரிடம் சரிவர பேசுவதில்லை எனவும் கூறப்படுகிறது. ஆசிரியை தரப்பில் கருத்து கூறாமல் எதையும் முடிவெடுக்க முடியாது என அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

…..ஸ்டீபன் தங்கதுரை