கொல்கத்தா : சாப்பிட வந்த வாடிக்கையாளர்களின் தலையில் கத்தியால் கொத்திய சம்பவம் மேற்குவங்கத்தில் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அரபிந்தோ சரணி பகுதியில் இயங்கிவருகிறது கரீம் ரெஸ்டாரண்ட். இங்கு கடந்த 26ம் தேதி இரவு சுமார் 11.15 அளவிற்கு நந்து தேசாய் மற்றும் அவரது நண்பர் நவநீத் சோனி இருவரும் கரீம் ஹோட்டலுக்கு உணவருந்த சென்றுள்ளனர். ரெஸ்டாரண்ட் ஊழியர்களும் கடை முதலாளியும் எந்த எரிச்சலில் இருந்தனரோ தெரியவில்லை.
சாப்பிட போகும் உணவுக்கு முன் கூட்டியே பணம் செலுத்த சொல்ல அப்பாவி வாடிக்கையாளர்களும் பணத்தை செலுத்தியிருக்கின்றனர். அதன் பின்னர் வெங்காயமும் எலுமிச்சையும் வாடிக்கையாளர்கள் கேட்க எரிச்சலடைந்த சப்ளையர் தகாத வார்த்தையில் திட்டியிருக்கிறார். பதிலுக்கு வாடிக்கையாளர்களும் திட்ட ஊழியர் ஒருவர் தான் வைத்திருந்த கத்தியை வைத்து நவநீத் தலையில் வெட்டியிருக்கிறார்.
பின்னர் கரீம் ரெஸ்டாரண்ட் முதலாளி மற்றும் ஊழியர்கள் 15 பேர் சேர்ந்து இருவரையும் தாக்கி ஹோட்டல் வாசலில் வீசியுள்ளனர். மயங்கிய நிலையில் இருந்த இருவரையும் மீட்ட சாலையில் சென்றவர்கள் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த தகவல் நந்து தேசாய் சகோதரி தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டபின்னரே வெளியாகியிருக்கிறது.
இதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. சமீபகாலங்களாக ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை பிரிவினர் அந்த மாநிலத்தில் வன்முறையை பொதுமக்கள் மீது கையாள்வதாக செய்திகள் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
…..உங்கள் பீமா