Monday, November 11, 2024
Home > தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம் > இந்தியாவை திணறவைத்த சைபர் அட்டாக்ஸ் 2021..!

இந்தியாவை திணறவைத்த சைபர் அட்டாக்ஸ் 2021..!

30-12-21/12.13PM

இந்தியா : சைபர் அட்டாக் என்பது கண்ணுக்குப்புலப்படாமல் எதிரி யாரென்றே தெரியாமல் அரசு இயந்திர கணினிகள் தொழில் நிறுவனங்களின் கணினிகள் அவற்றின் மென்பொருட்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும்.

இந்த சைபர் அட்டாக்குகளால் அரசே ஸ்தம்பித்து போவதுண்டு. அப்படி இந்தியாவை திணறவைத்த சில சைபர் அட்டாக்குகளை இந்த கட்டுரையில் காண்போம். இந்தியாவில் இந்த வருட முதல்பாதியில் நடந்த மால்வேர் தாக்குதல்களால் 165 மில்லியன் ரூபாய் இழப்பை இந்தியா சந்தித்திருப்பதாக செய்திகள் தெரிவவிக்கின்றன. அதுவம் தாக்குதல் நடந்த நிறுவனங்களின் பெயரை கேட்டாலே நம்மை ஆச்சர்யத்தில் வாய் பிளக்க வைக்கும்.

டொமினோஸ் இந்தியா ; 2021 மே மதம் டொமினோஸ் இந்தியா நிறுவனத்தில் நடந்த மால்வேர் தாக்குதல் ஒரு மில்லியன் வாடிக்கையாளர்களின் மொபைல் எண்கள் இருப்பிட விலாசம் மற்றும் மின்னஞ்சல் முகவரி அனைத்தையும் பொதுவெளியில் கசியவிட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த நாளில் 18மில்லியன் பேர் உணவுக்கு ஆர்டர் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

JUSPAY (ஜஸ்பே) ; இது இந்தியாவில் செயல்படும் கூகிள் பே போன்ற பணப்பரிவர்த்தனை செயலியாகும். 2020ல் இந்த நிறுவனத்தின் மீது நடந்த தாக்குதல் 2021 ல் சைபர் ஆரய்ச்சிக்குழு ஒன்று டார்க் வெப்பில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பின்னரே நிலைமை சீர் செய்யப்பட்டது.

`

கோவின் செயலி : இந்த வருட தொடக்கத்தில் கோவின் செயலி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தோராயமாக 15 கோடி பேர் தகவல்கள் பிடிஎப் ஆக பொதுத்தளத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன்பின்னர் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் டெல்லியை சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த வேலையில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கோவின் செயலி முற்றிலும் பாதுகாப்பு அமைப்பு மாற்றியமைக்கப்பட்டது.

மொபிக்விக் : இந்த பணப்பரிவர்த்தனை செயலியின் மீது இந்த வார்டுடம் நடந்த தாக்குதலில் 110,000மில்லியன் வாடிக்கையார்கள் தகவல்கள் கசிந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிறுவனம் மறுப்பு அறிக்கை வெளியிட்டிருந்தாலும் டார்க்வெப்பில் வாடிக்கையாளர்கள் தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

யாருமே எதிர்பாராத ஒட்டுமொத்த இந்தியர்களையுமே அதிரவைத்த சைபர் அட்டாக் என கூறப்படுவது ஏர் இந்தியா மீது தொடுக்கப்பட்டது தான். பிப்ரவரி 2021ல் கிட்டத்தட்ட 4.5 மில்லியன் உலகளாவிய ஏர் இந்தியா வாடிக்கையாளர்களின் பத்துவருட தகவல்கள் (2011-2021) வெளியாகி அனைவரையும் அதிரவைத்தது.

CAT எக்ஸாம் : 2021 மே மாதம் நடத்தப்பட்ட சைபர் தாக்குதலில் CAT எக்ஸாமில் கலந்து கொண்ட 1,90,000 தேர்வு எழுதியவர்களின் தகவல்கள் டார்க்வெப்பில் விற்பனை செய்ததாக சொல்லப்படுகிறது.

```
```

(MONEYCONTROL )மணி கண்ட்ரோல் : இந்த செயலியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 350 டாலருக்கு 700,000 பயனர்களின் தகவல்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நமது வங்கிக்கணக்கு மின்னஞ்சல் கணக்கு மற்றும் சமூக வலைதளத்தின் ரகசிய குறியீடுகளை மாதம் ஒருமுறையாவது மாற்ற வேண்டும் என மென்பொருள் ஆய்வாளர்கள் அறிவுரை வழங்குகின்றனர். மேற்சொன்ன தகவல்கள் அனைத்தும் கூகிளில் பெறப்பட்டவையாகும்.

….உங்கள் பீமா