Tuesday, October 15, 2024
Home > செய்திகள் > பிஜேபி காரியகர்த்தா மீது கடும் தாக்குதல்..! வெளியான வீடியோ

பிஜேபி காரியகர்த்தா மீது கடும் தாக்குதல்..! வெளியான வீடியோ

1-12-21/16.04pm

மே.வ : பிஜேபி இளம் காரியகர்த்தா வீட்டில் நுழைந்து அவரை தாக்கிய குண்டர்கள் அவரது வயது முதிர்ந்த தாயையும் தாக்கினர்.

மேற்கு வங்கத்தில் சர்வாதிகாரப்போக்கு மனநிலையுடைய மமதா பானர்ஜி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக அமர்ந்த மமதா பதவியேற்ற முதல்நாளிலேயே ஒண்ணரை லட்சம் இந்துக்களை அகதிகளாக அண்டை மாநிலங்களுக்கு ஓடவிட்டார். மேலும் நூற்றுக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.

`

ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகாயமுற்றனர். முப்பதிற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் கடந்த ஆறு மாதங்களாக மர்மமான முறையில் பிஜேபி தொண்டர்கள் கொல்லப்படுவதும் வழக்கு விசாரிக்கப்படாமல் முடித்து வைக்கப்படுவதும் தொடர்கதையாக இருக்கிறது. மேற்கு வங்க பாஜக தலைவர் வீட்டில் கடந்த மாதம் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

```
```

கடந்த வாரம் பிஜேபி தொண்டர்கள் சிலர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒரு பிஜேபி காரியகர்த்தா வீடு புகுந்து தாக்கப்பட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகரான அக்பர் ஆலம் என்பவர் பிஜேபி காரியகர்த்தா ஒருவரின் வீட்டுக்குள் தனது அடியாட்களுடன் நுழைந்து அவரை சராமரியாக தாக்கினார். மேலும் அவரது தாயையும் அடித்து கீழே தள்ளிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

…..உங்கள் பீமா