Saturday, June 10, 2023
Home > அரசியல் > விளம்பர பிரியை ஜோதிமணி எம்பி..? விமர்சித்த திமுக அமைச்சர்..! முழு பின்னணி..!

விளம்பர பிரியை ஜோதிமணி எம்பி..? விமர்சித்த திமுக அமைச்சர்..! முழு பின்னணி..!

4-12-21/ 14.32pm

கரூர் ; தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ள விளம்பரம் தேடுகிறார் என ஜோதிமணியை திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜோதிமணி எம்பி தன்னுடைய தொகுதியில் மக்கள் குறைகளை கேட்டறிந்து உதவிகள் செய்கிறாரோ இல்லையோ வருடம் ஒருமுறை ஏதாவது போராட்டம் செய்து தன்னுடைய இருப்பை காண்பித்து விடுவார். கடந்த அதிமுக ஆட்சியில் பராமரிப்புக்காக காந்தி சிலையை மூடி வைத்திருந்தனர். சிலையை அகற்ற போகிறார்கள் என வதந்தியை பரப்பி போராட்டத்தில் ஈடுபட்டு விளம்பரம் தேடிக்கொண்டார் என கரூர் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். மாற்று திறனாளிகளுக்கு மத்திய அரசு நிதி தொகுப்பை தவறாமல் வழங்கி வருகிறது. இதை மாநில அரசு அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்துக் கொடுக்கிறது. இந்த நிதியில் மாநில அரசின் பங்கும் உண்டு. கரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திட்டங்களை தனது தலைமையில் வழங்க விருப்பப்படுகிறார் ஜோதிமணி எம்பி என கூறப்படுகிறது. மேலும் மாவட்ட ஆட்சியர் மீது ஜோதிமணி ஊழல் புகார் கூறுவது குறிப்பிடத்தக்கது.

`

இதை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மறுக்கவே உள்ளிருப்பு நாடகத்தை அரங்கேற்றுகிறார் என கரூர் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி ” நீங்கள் எந்தெந்த பணிக்கு நிதி ஒதுக்கீடு கேட்டீர்கள். கொடுத்த ஆவணங்களின் நகலை கொடுங்கள்.

சிலர் அரசியல் செய்வதற்காகவும் சுய விளம்பரம் செய்யவும் தங்கள் இருப்பை காட்டவும் இப்படி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.” என குறிப்பிட்டார். மாவட்ட ஆட்சியர் தலைமையில் என அழுத்தமாக குறிப்பிட்டு ஜோதிமணி தலைமையில் நடைபெறாது என சூசகமாக கூறினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் விமர்சனம் திமுக காங்கிரஸ் இடையேயான மோதல்போக்கை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்துள்ளது என அதிமுகவினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

…..உங்கள் பீமா