Thursday, March 28, 2024
Home > அரசியல் > உள்ளாட்சி தேர்தல் ஆரம்பிக்கும் முன்னரே பணப்பட்டுவாடா ஆரம்பம்..! சிக்கலில் மாட்டிய முக்கிய கட்சி..!!

உள்ளாட்சி தேர்தல் ஆரம்பிக்கும் முன்னரே பணப்பட்டுவாடா ஆரம்பம்..! சிக்கலில் மாட்டிய முக்கிய கட்சி..!!

திமுகவின் திருமங்கலம் பார்முலாவை மற்ற மாநில கட்சிகள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. தமிழகத்திற்கு ஒவ்வொரு தேர்தலிலும் மக்களுக்கு இலவசம் என்ற வாக்குறுதி போல மற்ற மாநில கட்சிகளும் இதையே பின்தொடர்ந்து மக்களை மொட்டையடிக்கின்றனர் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ராஷ்ட்ரிய ஜனதா தள் கட்சி தலைவரும் லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் வரப்போகிற தேர்தலுக்கு மக்கள் தனக்கு ஓட்டளிக்க பணம் பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்துள்ளது. பிஹாரில் வருகிற செப்டம்பர் 24 முதல் டிசம்பர் 12 வரை பஞ்சாயத்து தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இந்த குற்றசாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`

இது குறித்து ஜனதா தள் செய்தி தொடர்பாளரும் எம் எல் ஏவுமான நீரஜ் குமார் ஒரு புகார் மனுவை ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய நீரஜ் “தேஜஸ்வி யாதவ் தந்து சொந்த தொகுதியான கோபால்கஞ் பகுதியில் தனது காரில் உட்கார்ந்து கொண்டு அங்கு குழுமியிருந்த பெண்களுக்கு கரன்சி நோட்டுக்களை விநியோகித்தார்.

```
```

வரவிருக்கும் கிராம பஞ்சாயத்து தேர்தலை மனதில் கொண்டு தனக்கு வாக்களிக்க அனைவருக்கும் பணப்பட்டுவாடா செய்தார். இது பொதுமக்கள் சிலரால் வீடியோவாக எடுக்கப்பட்டு எனது பார்வைக்கும் வந்தது.

அதையடுத்து வீடியோவுடன் சேர்த்து புகார் மனு ஒன்றையும் இந்திய தேசிய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளேன். தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.” என தெரிவித்தார். தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் தேஜஸ்வியின் இந்த செயல்பாடு கட்சிக்குள்ளேயே சலசலப்பை உண்டுபண்ணியுள்ளது.