Saturday, July 27, 2024
Home > அரசியல் > பாஸ்..! ட்ரெயின்க்கு பின்னாடி தலையை வச்சுருக்கீங்க..! திமுகவை தோலுரித்த தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை..!

பாஸ்..! ட்ரெயின்க்கு பின்னாடி தலையை வச்சுருக்கீங்க..! திமுகவை தோலுரித்த தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை..!

4-12-21/12.33pm

சென்னை : பாஸ் ட்ரெயின்க்கு பின்னாடி நீங்க தலையை வச்சிருக்கீங்க என ஒரு திரைப்படத்தில் வசனம் வரும். அதே போல ட்ரெயின் வராத தண்டவாளத்தில் திமுகவினர் தலைவைத்து படுத்த வரலாறும் உண்டு. அதே போல தற்போதும் இஸ்லாமியர்கள் விஷயத்தில் இரட்டைவேடம் போடுவதாக தமிழக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவுக்கு இஸ்லாமியர்கள் ஹஜ் புனித யாத்திரை செல்வது வழக்கம். அவர்கள் மெக்கா செல்ல இந்தியாவிலிருந்து இதுவரை நான்கு முதல் ஆறு இடங்கள் மட்டுமே செயல்பட்டுவந்தது. மத்திய பிஜேபி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஹஜ் பயணத்திற்கான விமான நிலையங்களின் எண்ணிக்கையை பத்தாக அதிகரித்தது.

2022 க்கான ஹஜ் பயணம் மேற்கொள்ள பத்து இடங்களை மத்திய பிஜேபி அரசு ஒதுக்கியுள்ளது. சென்னை விமான நிலைய தரப்பிலோ தமிழக அரசு தரப்பிலோ சென்னை விமான நிலையத்தை ஹஜ் பயணம் மேற்கொள்ளும் விமான நிலையமாக சேர்க்க கோரிக்கையோ அல்லது எந்த ஒரு அழுத்தமோ கொடுக்கப்படவில்லை.

`

இதனால் மத்திய அரசு 10 விமான நிலையங்களை அறிவித்துவிட்டது. ஆனால் அப்போது வாயை திறக்காத திமுக கடந்த மாதம் 11ம் தேதி மத்திய அரசுக்கு கண்துடைப்புக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. மேலும் எம்பி டிஆர் பாலு நேற்று முன்தினம் அவையில் இதுகுறித்து கேள்வியெழுப்பினார். நக்வி ” நீங்கள் இது குறித்து எந்த கோரிக்கையும் எழுப்பவில்லையே. இப்போது அறிவித்தவுடன் நாடகமாடுகிறீர்களா” என பதிலடி கொடுத்தார்.

```
```

மேலும் தமிழக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து ” இஸ்லாமியர்களை திமுக அரசு வஞ்சிக்கிறது. அறிவிப்பு கொடுத்தபோது மௌனமாக இருந்துவிட்டு இப்போது கபடநாடகம் ஆடுகிறது திமுக” என கடுமையாக விமர்சித்தார்.

…..உங்கள் பீமா