Wednesday, May 29, 2024
Home > பொழுதுபோக்கு > புரொபெசர புடிக்காத ஆளுங்க உண்டா..! உலக மக்களை கவர்ந்த மணி ஹீஸ்ட் பாகம் 5 விமர்சனம்..!

புரொபெசர புடிக்காத ஆளுங்க உண்டா..! உலக மக்களை கவர்ந்த மணி ஹீஸ்ட் பாகம் 5 விமர்சனம்..!

2017ல் க்ரைம் த்ரில்லராக வெளிவந்த மணி ஹீஸ்ட் தொலைக்காட்சி தொடர்களிலேயே சாதனை படைத்த சீரிஸ் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதன் திரையாக்கமும் நடிகர்களின் அற்புதமான பங்களிப்பும் ஒவ்வொரு காட்சிக்கும் படக்குழுவினரின் மெனெக்கெடலும் இந்த சீரீஸை உச்சத்துக்கு கொண்டுபோயிருக்கிறது.

இந்த சீரிஸின் ஸ்பெஷாலிட்டியே கதாநாயகர்கள் கம் திருடர்கள் யாருக்கும் பெயர் கிடையாது. சீரிஸ் முழுக்க ஊரின் பெயர் கொண்டே அழைக்கப்படுவர். நைரோபி டோக்கியோ பெர்லின் என பாத்திரங்களுக்கு பெயர் சூட்டி வித்தியாசம் காண்பித்திருப்பார் இயக்குனர். ஒரு ஸ்பானிஷ் தொலைகாட்சி தொடர் உலக மக்களால் கொண்டாடப்படுகிறது எனில் அது மணி ஹீஸ்ட்தான்.

இதன் டைரக்டர் அலெக்ஸ் பினா. புரபெசராக வந்து கதையை தாங்கிப்பிடிக்கும் புத்திசாலி கதாபாத்திரமான பெர்லின் ப்ரதர்ஸ் கதாபாத்திரத்தில் பின்னி பெடெலெடுத்திருப்பவர் ஆல்வரோ மோர்த்தே. கடந்த நான்கு சீசன்களும் வெறித்தனமான திரைக்கதை அமைப்புடன் விறுவிறுப்பாக சென்றிருக்கும்.

இந்த ஐந்தாவது சீசன் எப்படி இருக்குமோ என்ற சிறு சந்தேகம் இருந்தாலும் அந்த எண்ணத்தை தூக்கி தூர வைத்துவிடுங்கள். படு பயங்கரமாக மிரட்டியிருக்கிறார்கள் இந்த ஐந்தாம் சீசனில். ஐந்தாம் சீசன் முதல் பாகத்தில் பெர்லின் ப்ரதர்ஸின் அண்ணனை காண்பிக்கிறார்கள் அவர் தனது மகனான ரபேலை ஒரு ரெஸ்டாரண்டுக்கு வர சொல்லி ஒரு திருட்டு வேலையில் ஈடுபட சொல்கிறார். ரபேல் மறுக்கிறார்.

`

வில்லி போலீசிடம் ப்ரொபெஸர் மாட்டிக்கொள்வதாக ஆரம்பிக்கும் இந்த சீரிஸ் படு விறுவிறுப்பாக செல்கிறது. ப்ரொபெஸர் அரசாங்க கஜானாவையே கொள்ளையடிக்க திட்டம் போட்டு அதற்கான வேலையில் இறங்குகிறார். அதற்க்கு முன்னரே பக்காவான திட்டத்துடன் இறங்குகிறார்.

60 டன் தங்கத்தை உருக்கி கொண்டிருக்கிறது அந்த திருடர்கள் குழு. அதே நேரத்தில் அந்த குழுவை சேர்ந்த ஒருவன் விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறான். அவனை காவல்துறையினர் விரட்டி கொண்டிருக்க அது கூட நம்ம ப்ரொபெஸரின் திட்டத்தில் ஒன்றுதான். இருந்த இடத்திலிருந்து அவனை அங்கிருந்து காப்பாற்றுகிறார் ப்ரொபசர்.

அதேநேரத்தில் கஜானாவை கொள்ளையடிக்கும் கும்பலில் சில சர்ச்சைகள் மனஸ்தாபங்கள் எழுகிறது. இந்நேரத்தில் தனியாக இருக்கும் ப்ரொபசர் வில்லி போலீசிடம் மாட்டிக்கொள்கிறார். அவள் ப்ரொபசரை காலில் துப்பாக்கியால் சுட்டு அவரது திட்டம் குறித்து விசாரிக்கிறாள். ஒரு கட்டத்தில் வேதனை தாங்க முடியாமல் திட்டத்தை சொல்லிவிடுகிறார்.

```
```

ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ப்ரொபசர் அவரின் குழுவுக்கு அழைத்து பேசவில்லை எனில் ஏதோ பிரச்சினை என்று அர்த்தம். அவர் அழைத்து பேசாததால் பிரச்சினை என புரிந்து கொண்ட அவரது குழு தடுமாறுகிறது. அந்த பக்கம் காவல் உயர் அதிகாரிகள் பணயக்கைதிகளை மீட்கவும் திருடர்கள் குழுவை பிடிக்கவும் ரானுவத்தில் பணிபுரிந்த ஒரு ஸ்பெஷல் டாஸ்க் போர்சை அணுகுகின்றனர்.

அதே நேரம் இந்த போலீஸ் உயர் அதிகாரி அரசு மேல் விழுந்த கறையை போக்க ப்ரொபெஸரை பிடித்து வைத்திருக்கும் வில்லி போலீஸ் மீது பழியை தூக்கிப்போட நினைக்கிறார். அந்த போலீஸ் வில்லி பணியிலிருந்து நீக்கப்பட்டவர் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

அங்கே மாட்டிக்கொண்ட ப்ரொபஸர் தனது குழுவுக்கு வில்லி போலீசை அருகில் வைத்துக்கொண்டு போன் பண்ணி எல்லாரிடமும் தனித்தனியாக மன்னிப்பு கேட்கிறார். அந்த குழுவில் இருக்கும் தனது காதலியிடம் தங்கள் திட்டம் வெளிப்பட்டதையும் கூறுகிறார்.

இனி மாற்று திட்டம் இல்லையே என திருடர்கள் குழு சோகத்தில் இருக்க அந்த இடத்திற்கு மொதமொதவென ராணுவப்படை வந்து இறங்குகிறது. இந்த இடத்தில் பாகம் ஒன்று முடிவடைகிறது. இரண்டாம் பாகத்தை நாளை பார்க்கலாம்.