Saturday, November 9, 2024
Home > செய்திகள் > வேலூரில் பதட்டம்..! காவல் ஆய்வாளரை காவல்நிலையம் புகுந்து மிரட்டிய அஹம்மது..!

வேலூரில் பதட்டம்..! காவல் ஆய்வாளரை காவல்நிலையம் புகுந்து மிரட்டிய அஹம்மது..!

2-12-21/10.19am

வேலூர் : காவல் நிலையத்திற்குள் புகுந்த கும்பல் ஒன்று காவல் ஆய்வாளர் மற்றும் காவல் அதிகாரிகளை மிரட்டும் காட்சி தற்போது பரபரப்பாகி வருகிறது.

திமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு சலுகை என்கிற பெயரில் அபரிமிதமான சலுகைகள் தொடர்ந்து கொடுக்கப்படுவதால் வந்த வினை என்று வேலூர் மக்கள் விமர்சித்து வருகின்றனர். தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளராக இருப்பவர் ஏஷாஸ் அகமது. இவர் காவல்நிலத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் புகுந்து அங்கிருந்த அதிகாரிகளை ஒருமையில் பேசியதுடன் மிரட்டவும் செய்தார்.

`

நீதிமன்ற உத்தரவின் பெயரில் ஒரு வீட்டை காலி செய்ய காவல்துறையினர் உத்தரவிட்டதாக தெரிகிறது. சம்பந்தப்பட்டவர் இஸ்லாமியர் என சொல்லப்படுகிறது. அவர் தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழக செயலாளர் அஹம்மதுவிடம் முறையிட அவர் ஸ்டேஷனுக்குள் புகுந்து ” அவரை வீட்டை காலிசெய்ய சொல்ல நீங்கள் யார் என கேட்டு மிரட்டினார்.

```
```

மேலும் முடிந்தால் என் மீது வழக்கு பதியுங்கள் என கூக்குரலிட்டார். அதற்க்கு காவல் ஆய்வாளர் நீங்கள் எதுவாயிருந்தாலும் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளுங்கள் என கூற அதன்பிறகும் அஹம்மது காவல்நிலையத்தில் இருந்த அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

…..உங்கள் பீமா