Friday, March 29, 2024
Home > செய்திகள் > அசிங்கப்பட்ட ஆவுடையப்பன்..! நெட்டிசன் கொடுத்த பதிலடி..!

அசிங்கப்பட்ட ஆவுடையப்பன்..! நெட்டிசன் கொடுத்த பதிலடி..!

2-12-21/6.53am

சென்னை : திமுக ஆதரவு ஊடகங்களின் நிருபர்கள் கேள்வி கேட்கிறேன் பேர்வழி என நினைத்து ஆதாரபூர்வமில்லாத பொய்களை அவிழ்த்துவிட்டு நெட்டிசன்களிடம் அசிங்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது.

சமீபத்தில் ரங்கராஜ் பண்டேவிடம் கேள்வி என்கிற பெயரில் திமுகவால் கொடுக்கப்பட்ட அஜெண்டாவை கேள்வியாக்கி எழுப்பிய ஆவுடையப்பன் எனும் இடது சாரி நிருபர் பாண்டேவிடம் சரியாக வாங்கிக் கட்டிக்கொண்டார். மேலும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல் டீசல் விலை குறைந்திருக்க தமிழகத்தில் மட்டும் குறைக்கப்படவில்லை.

இதை மக்கள் கேள்வியெழுப்பி போராட்டத்தை முன்னெடுத்துவிடுவார்களோ என்கிற அச்சத்தில் இது போன்ற நிருபர்களை வைத்து திமுக பிரச்சினைகளை திசை திருப்ப பார்க்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஆவுடையப்பன் என்கிற அந்த நிருபர் பெட்ரோல் மீதான வரி குறித்து பொய்யான தகவலை வெளியிட்டு வாங்கிக்கட்டிக்கொண்டுள்ளார்.

`

அவர் தனது பதிவில் “சுரண்டப்படும் மாநிலங்கள், மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோல் மீது 27₹வரியாக விதிக்கிறது தற்பொழுது,அதில் மாநிலங்களுக்கு பகிர்ந்துகொடுக்கும் நிதியானது 1.40₹ தான் மற்றது செஸ் என்ற பிரிவின் கீழ் மாநிலங்களுக்கு கொடுப்பதில்லை மத்திய அரசு” என குறிப்பிட்டுள்ளார். இதற்க்கு நெட்டிசன் ஒருவர் அளித்த பதிலடியில்,

```
```

2014 வரை மத்திய அரசு வசூலித்த வரியில் மாநிலங்களுக்கு 32 சதவீதம் தான் வழங்கப்பட்டது. 2014 பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலங்களுக்கு வழங்கும் நிதி பங்கீட்டை 42 சதவீதம் ஆக்கியது.சென்ற வருடம் முதல் தமிழகம் போன்ற மாநிலங்கள் பலன் பெறவேண்டுமென்பதற்காகச் சிறந்த நிதி மேலாண்மை மற்றும் மக்கள் தொகை கட்டுக்குள் வைத்துள்ள மாநிலம் போன்ற விஷயங்களைக் கணக்கில் கொண்டு அதிக ஒதுக்கீடு வழங்குகிறது மத்திய அரசு” என தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

…..உங்கள் பீமா