Saturday, October 5, 2024
Home > அரசியல் > பெங்களூருவில் பரபரப்பு..! பிஜேபி எம்.எல்.ஏவை கொல்ல கூலிப்படையிடம் பேரம்..!?

பெங்களூருவில் பரபரப்பு..! பிஜேபி எம்.எல்.ஏவை கொல்ல கூலிப்படையிடம் பேரம்..!?

2-12-21/11.09am

பெங்களூரு : பிஜேபி எம்.எல்.ஏவை கொல்வதற்கு ஒரு கோடி ரூபாய் பேரம்பேசிய காங்கிரஸ் தலைவர் ஒருவரின் வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் எலகங்கா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிஜேபியை சேர்ந்த விஸ்வநாத். இவரை காங்கிரஸ் தலைவரான கோபால் கிருஷ்ணா என்பவர் ” விஸ்வநாத்தை முடித்து விடுங்கள். ஒரு கோடி தர தயாராய் இருக்கிறேன். அவனை கொன்றுவிடுங்கள்” என சாதாரணமாக கொலைக்கான திட்டத்தை பேசிய மூன்று நிமிட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

`

காங்கிரசால் நடத்தப்பட்ட ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் காங்கிரஸ் கர்நாடக தலைவர் சிவகுமாரை பற்றி காங்கிரஸ் எம்பி ஒருவரே கமிஷன் பார்ட்டி ஊழல்வாதி என கூறியது நினைவிருக்கலாம். அந்த வரிசையில் தற்போது எதிர்கட்சியாய் நினைக்கவேண்டியவர்களை எதிரிகளாய் நினைத்து கொல்லத் துணிந்துவிட்டதாக பொதுமக்கள் விமர்சிக்கின்றனர்.

```
```

இந்நிலையில் இதுகுறித்து பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் அரகா ஜனனேந்திரா “இந்த விஷயத்தை காவல்துறை கவனமாக கையாள்கிறது. விஸ்வநாத் இதுகுறித்து என்னிடம் பேசியிருக்கிறார். அவருக்கு பாதுகாப்பை அதிகப்படுத்தியிருக்கிறோம். காவல்துறை இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.” என தெரிவித்தார்.

….உங்கள் பீமா